என்னையா பெஞ்ச்ல உட்கார வச்சீங்க.. இனி பெஞ்ச் பக்கமே நான் போக மாட்டேன்.. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிமர்ஜீத் சிங்

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 167 ரன்கள் குவித்த நிலையில், சிஎஸ்கேவின் பந்துவீச்சாளரான சிமர்ஜீத் சிங் இந்த சீசனில் தனது முதல் போட்டியில் களமிறங்கி தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

பஞ்சாப் அணியின் சொந்த மைதானமான தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரகானே ஒன்பது ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும், கேப்டன் ருத்ராஜ் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

அவருடன் அருமையாக பார்ட்னர்ஷிப் அமைந்த டாரி மிச்சல் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 32 பந்துகளில் 57 ரன்கள் குவித்தனர். மிச்சல் 19 பந்துகளில் 30 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேற, அவரை தொடர்ந்து கேப்டன் ருத்ராஜ் 21 பந்துகளில் 32 ரன்கள் குவித்து வெளியேறினார். அதற்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் 43 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பஞ்சாப் அணித்தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹர்சல் பட்டேல் நான்கு ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களம் இறங்கியது. பஞ்சாப் அணியின் பேர்ஸ்டோ மற்றும் ரூசோ ஆகியோரை துஷார் தேஷ் பாண்டே அற்புதமாக பந்துவீசி போல்ட் முறையில் இருவரையும் காலி செய்தார். அதற்குப் பிறகு பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆன சாசாங்க் சிங் சாண்ட்னர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

அதற்குப் பின்னர் அணியின் கேப்டன் சாம் கரணை ரவீந்திர ஜடேஜா வெளியேற்ற, அதற்குப் பிறகு இந்த சீசனில் தனது முதல் போட்டியில் வாய்ப்பு பெற்ற பஞ்சாபி வீரரான சிமர்ஜீத் சிங் அற்புதமாக பந்து வீசினார். அவரது பந்துவீச்சில் ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் ஆட்டம் இழந்தனர். ஜித்தேஷ் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே மகேந்திர சிங் தோனி இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இருந்து வெளியேற, ஹர்ஷல் பட்டேல் 12 ரன்களில் சமீர் ரிஸ்வியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதுவரை மூன்று ஓவர்கள் வீசி உள்ள சிம்ர் ஜீத் சிங் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் மணிக்கு 144 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய திறமையும் பெற்றுள்ளார். துல்லியமான லைன் அண்ட் லென்த் வீசுவதிலும், பவுன்சர் பந்துகள் வீசுவதிலும், பந்துவீச்சில் வேரியேஷன் காட்டுவதிலும் சிறப்பாக செயல்படும் இவரை ஏன் சிஎஸ்கே பத்து போட்டிகளாக உட்கார வைத்தது என்று தெரியவில்லை.

இதையும் படிங்க:தோனிக்கு இப்படியா நடக்கணும்.? இதயமே நொறுங்கிய மொமென்ட்.. உடைந்து போன ரசிகர்கள்

தற்போது வரை பஞ்சாப் அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்து இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு ஏறக்குறைய உறுதி ஆகிவிட்ட நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles