கோலியை விமர்சிக்க எந்த காரணம் இல்லை என்று இதை பேசுகிறார்கள்.. விராட் கோலி விளையாடினால் மட்டுமே ஆர்சிபி ஜெயிக்காது.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் அக்ரம்

நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது 51 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7 போட்டியிடில் தோல்வியும், மூன்று போட்டிகளில் வெற்றியும் பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி விமர்சிக்க வேறு காரணங்கள் கிடைக்காததால் அவரின் பேட்டிங்கை தற்போது விமர்சித்து வருகிறார்கள் என்று பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் தொடருக்கு முன்னர் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு பெற்றார். அதற்குப் பிறகு ஐபிஎல் இல் விளையாடிய விராட் கோலி முதல் சில ஆட்டங்களில் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்த பிறகு அவரது பேட்டிங் வேகம் அதற்குப் பிறகு ஆரம்பித்தது.

- Advertisement -

இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி 500 ரன்கள் குவித்து ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதங்கள் அடித்துள்ளார். இவரது பேட்டிங் ஆவரேஜ் தற்போது 74 ஆக இருந்த போதிலும், ஸ்ட்ரைக் ரேட் 147.49 ஆக உள்ளது. டி20 உலக கோப்பை தொடர் நெருங்கி வருவதால் விராட் கோலியின் பேட்டிங் வேகம் அதிகரிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் செயல்பாடுகள் மோசமாக இருக்கிறது. இதன் காரணமாகவே விராட் கோலியின் பேட்டிங்கும் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஒரு பேட்ஸ்மேன் 150 ஸ்டைக் ரேட்டில் சதம் விளாசுகிறார் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர் விளையாடும் அணி வெற்றி பெற வேண்டும். அப்படியே அணி வெற்றி பெற்றால் எந்த பிரச்சினையும் எழாது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. விராட் கோலி கேப்டன் ஆக இருந்தபோது அவர் மீது அழுத்தம் இருந்தது. தற்போது கேப்டன் பதவியை விட்டு அவர் விலகினாலும் அவர் மீது எந்த அழுத்தமும் குறைந்தது போல் தெரியவில்லை.

இதையும் படிங்க:நாங்கள் பிளே ஆப் செல்வோம் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.. இந்த 2 விஷயங்களும் தற்போது நன்றாக உள்ளது.. கூறுகிறார் ஆர்சிபி பயிற்சியாளர் ஆன்டி பிளவர்

இருந்தாலும் தற்போது விராட் கோலி மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். கிரிக்கெட் பொறுத்த வரை ஒரு வீரரால் மட்டுமே போட்டியை மாற்றி விட முடியாது. அணியில் உள்ள 11 வீரர்களும் சேர்ந்து விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். எந்த ஒரு வீரரையும் காரணம் இன்றி விமர்சிக்க முடியாது. அதேபோல விராட் கோலி இளைய தலைமுறை வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் ரோல் மாடலாக இருக்கிறார். ஃபிட்னஸ் செயல்பாடுகள் என்று அனைத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles