டாஸ்ல பேட்டிங் எடுத்தது தப்பில்ல.. நாங்க பேட்டிங் பண்ண விதம்தான் தப்பு.. இவ்ளோ ரன்கள் அடிச்சிருக்கணும்.. தோல்விக்கான காரணத்தை விளக்கும் ரிஷப் பண்ட்

நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் தோல்விக்கான காரணம் குறித்து விளக்கி இருக்கிறார்.

- Advertisement -

கொல்கத்தா அணியின் சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி ஆச்சரியப்படுத்தும் விதமாக பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. ஏனெனில் ஆடுகளம் முதலில் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்தது. இதை உணராத டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட போய் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர்.

- Advertisement -

அதிரடி ஆட்டக்காரரான மெக்கர்க் 12 ரன்கள் இன்னும் பிரித்விஷா 13 ரன்களிலும் ஆட்டமிழக்க அதற்கு பின்னால் வந்த வீரர்கள் விக்கட்டை விரைவாக இழந்தனர். இதனால் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் குவித்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்து இருந்தது.

- Advertisement -

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை வீணடித்த டெல்லி அணியினர், பின்பு அதற்கான பலனை அனுபவித்தனர். பதினாறு ஓவர்களிலேயே மூன்று விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. சால்ட் 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்விக்கான காரணம் குறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறும் பொழுது
“நாங்கள் டாஸ் வென்று பேட்டிங் செய்தது நல்ல முடிவு தான். ஆனால் ஒரு யூனிட் ஆக நாங்கள் பேட்டிங் சரியாக செய்யவில்லை. 150 ரன்கள் என்பது மிகவும் குறைவான இலக்கு. கிரிக்கெட்டில் இது ஒரு பகுதி எனவே நாம் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இன்று எங்களுடைய நாளாக இல்லை. டி20 கிரிக்கெட் பொருத்தவரை ஒரே நேர்கோட்டில் செல்ல முடியாது. இன்று 40 முதல் 50 ரன்கள் வரை குறைவாக எடுத்திருந்தோம். 180 முதல் 200 ரன்கள் வரைக்கும் குவித்திருந்தால் இந்த ஆடுகளத்திற்கு சரியான ரன்களாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:சிஎஸ்கேவில் இருந்து விலகினாலும் வங்கதேச அணியில் இடமில்லை.. ஜிம்பாப்வே டி20 தொடருக்கு முஸ்தபிகுர் பெயர் நீக்கம்.. காரணம் என்ன?

இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல உதவியாக இருந்தது. ஆனால் எங்களது பேட்டிங்கால் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு போதிய ரன்களை கொடுக்க முடியவில்லை. எனவே தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் மீண்டு வர முயற்சிப்போம் என்று கூறி இருக்கிறார். கொல்கத்தா அணிக்கு இது ஆறாவது வெற்றியாகும். ஒன்பது போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. டெல்லி அணி தற்போது ஆறாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles