சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது சிக்கலான நிலையில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நடப்பு சீசனைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றியும், நான்கு போட்டிகளில் தோல்வியையும் தழுவி இருக்கிறது.
இன்று நடைபெற உள்ள முக்கியமான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. வலுவான சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி வெற்றி பெறுமா? என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அதிரடியாக கலக்கிக் கொண்டிருக்கும் சன்ரைசர்ஸ் அணி இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது.
அதிரடிக்கு பெயர் போன பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் இருப்பதால் பந்துவீச்சில் சென்னை அணி இவர்களை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். மேலும் பேட்டிங்கிலும் சென்னை அணி தற்போது தடுமாறி வருகிறது. அணியின் கேப்டன் ருத்ராஜ் மற்றும் சிவம் துபே, மகேந்திர சிங் தோனி ஆகியோரை நம்பியே பெரும்பாலும் களமிறங்குகிறது.
புதிதாக எடுக்கப்பட்ட டாரி மிச்சல் மற்றும் ரட்ச்சின் ரவீந்திர ஆகியோர் பேட்டிங்கில் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில், அனுபவ வீரரான ரகானேவும் பேட்டிங்கில் சுற்று தடுமாறி வருகிறார். எனவே இவர்கள் மூவரும் இந்த போட்டியின் மூலம் பார்முக்கு வர வேண்டியது மிகவும் அவசியம். சென்னை அணியின் பேட்டிங் குறித்து பயிற்சியாளர் மைக்கேல் ஹசி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது
“சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தற்போது ரவீந்திர ஜடேஜா புதிய ரோலில் களமிறங்குகிறார். கடந்த ஆண்டுகளில் ஜடேஜா பேட்டிங் வரிசையில் கீழே வந்து விளையாடிக் கொண்டிருந்தார். தற்போது சூழ்நிலைக்கு தகுந்தவாறு அவர் மேலே வந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் நல்ல மனநிலையில் வலைப்பயிற்சியில் பந்தை நன்றாக அடித்து விளையாடுகிறார்.
லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். அவர் பந்தின் வேகத்தை பயன்படுத்தி கேப் கண்டுபிடித்து சிறப்பாக விளையாடவும் முடியும். மேலும் விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடக்கூடிய திறமை கொண்டவர். மேலும் ரகானேவுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருக்கிறோம் அவருக்கு காலில் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது. அதிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். சுழற் பந்துவீச்சை பொறுத்தவரை சென்னை அணி எப்போதுமே வலுவானது.
இதையும் படிங்க:நன்றி.. விரைவில் சந்திப்போம்.. வாழ்த்திய சிஎஸ்கே.. சிஎஸ்கேவை எச்சரித்த பஞ்சாப் அணி.. என்ன நடந்தது?
ஆனால் பனிப்பொழிவுதான் கடந்த சில போட்டிகளாக பிரச்சனை ஏற்படுத்தி எங்கள் வெற்றியைத் தடுக்கிறது. பனிப்பொழிவின் போது எங்கள் பந்து வீச்சாளர்கள் பந்தை நன்றாக கிரிப் செய்து வீசுவதில் சிரமப்படுகிறார்கள். தற்போது இதுதான் எங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

