தொடரும் மும்பை அணியின் சோகம்.. 6வது தோல்வியை சந்தித்த ஹர்த்திக் பாண்டியா.. 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி நிர்ணயித்த மெகா இலக்கை துரத்திய மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

டெல்லியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஜோடி 114 ரன்கள் இருந்தபோது தங்களது முதல் விக்கட்டை பறிகொடுத்தது. சிறப்பாக விளையாடிய மெக்கர்க் 27 பந்துகளில் 11 பௌண்டரிகள், மற்றும் ஆறு சிக்சர்களுடன் 84 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் பொரேல் 27 பந்துகளில் 36 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழக்க அதற்கு பின்னர் களம் இறங்கிய சாய் ஹோப் 17 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் குவித்தார். பின்னர் இறுதியாக ஸ்டெப்ஸ் 24 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்களுடன் 47 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதனால் டெல்லி அணி இறுதியாக 20 ஓவர்களில் 257 ரன்கள் குவித்தது. மும்பை அணியின் மோசமான பந்துவீச்சு இந்த போட்டியிலும் வெளிப்பட்டது. ஓரளவு சிறப்பாக பந்து வீசிய பும்ரா நான்கு ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி மும்பை அணி களம் இறங்கியது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 8 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 14 பந்துகளில் 20 ரன்களில் வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் 13 பந்துகளில் 26 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு களம் இறங்கிய திலக் வர்மா ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடினார்.

- Advertisement -

மறுமலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் என 46 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, இறுதியாக டிம் டேவிட் 17 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். கடைசி ஓவர் 25 ரன்கள் தேவைப்பட, 31 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் குவித்த நிலையில் திலக் வர்மா 62 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க:ஐபிஎல் வேற.. டி20 உலக கோப்பை வேற.. அங்க விராட் கோலி வேற லெவல் ஃபார்ம்ல இருப்பாரு.. கோலிய இந்த இடத்துல களம் இருக்குங்க.. கூறுகிறார் ஸ்ரீகாந்த்

இதனால் கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே வந்த நிலையில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 247 ரன்கள் மட்டுமே குவித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை பரிதாபமான தோல்வியை சந்தித்தது. ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மும்பை அணி தற்போது ஒன்பதாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles