இந்தியாவில் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடர் முடிந்த உடன் வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும் தங்களது சிறந்த அணியை தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்திய தேர்வு குழு ஐபிஎல் இல் சிறப்பாக செயல்படும் வீரர்களை வைத்து டி20 உலக கோப்பை காண இந்திய அணியை தயார் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
2024 டி20 உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் சராசரியாக ஒரு மாதமே இருக்கும் நிலையில்,அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் நியூயார்க் மற்றும் அமெரிக்கரை சுற்றியுள்ள நகரங்களில் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. உலக கோப்பையை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ள ஐசிசி வெஸ்ட் இண்டீஸ் குழும நாடுகளில் ஒன்றான ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்டை உலகக் கோப்பை தூதராக அறிவித்தது.
அவர் அமெரிக்க முழுவதும் பிரபலமானவர் என்பதால் ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளது. அடுத்ததாக டி20 கிரிக்கெட் அதிக ரன்கள் குவித்தவரான வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த கிரிஸ் கெயில் மற்றொரு தூதராக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இந்தியாவில் அதிக கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட யுவராஜ் சிங் மற்றொரு தூதராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்
முதன்முதலில் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை நடந்த போது யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து உலக சாதனை படைத்தார். மேலும் அந்தத் தொடரில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் அமைந்தார். அந்த வகையில் யுவராஜ் சிங் தற்போது மற்றொரு தூதராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து யுவராஜ் சிங் கூறும்பொழுது
” டி20 உலக கோப்பை ஆடியதில் இருந்து எனக்கு சில பசுமையான நினைவுகள் உள்ளன. அந்த வகையில் நான் அடித்த ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடர்களில் இது பெரிது.
மேலும் நியூயார்க்கில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டி20 உலக கோப்பை தொடரின் முக்கியமான போட்டியாக அமையும். இந்த தொடரின் ஒரு பகுதியாக உலகத்தில் சிறந்த வீரர்கள் புதிய மைதானத்தில் பங்கேற்பதை காணக் கிடைப்பது எனக்கு கிடைத்த கௌரவமாக நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

