தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பெங்களூர் அணி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
16 வருடங்களாகவே பெங்களூரு அணி பல நட்சத்திர வீரர்களை வைத்திருந்த போதிலும், ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும் பெங்களூர் அணி மூன்று முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கதது. இதில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு வந்து கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது குறித்து அணில் கும்ப்ளே பேசி இருக்கிறார்.
அப்போது வலுவாக 2009, 2011, 2016ஆம் ஆண்டு இருந்த பெங்களூர் அணி தொடரின் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்து வந்தது. அந்த 3 ஆண்டுகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் பைனலுக்கு தகுதி பெற்றது. தற்போது ஆர்சிபி நிர்வாகம் செய்து வரும் தவறுகளால்தான் அந்த அணியின் செயல்பாடு கடந்த சில சீசன்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.
2009ஆம் ஆண்டு ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. அப்போது இறுதிப் போட்டிக்கு வந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே குவித்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்தது. அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது கடைசி விக்கெட்டாக அணில் கும்பிளே மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் களத்தில் இருந்தனர். ஆர்பி சிங் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் அனில் கும்ப்ளே சிங்கிள் எடுத்து அந்தப் பக்கம் சென்று விட, அடுத்த இரண்டு பந்துகளையும் உத்தப்பா ஸ்கூப் ஷாட் ஆட போய் இரண்டு பந்துகளையுமே வீணடித்தார். இதனால் ஆர்சிபி அணி 2009ஆம் ஆண்டில் சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்தது.
இதுகுறித்து அணில் கும் பிளே கூறும்பொழுது
“அந்தப் போட்டியில் நாங்கள் தவறவிட்ட வாய்ப்புகள் அனைத்துமே ஞாபகம் இருக்கிறது. நோ- பால், பிரவீன் குமார் வீசிய ஐந்து வைடுகள் என்று அனைத்தும் நினைவில் இருக்கிறது. இப்போதும் ராபின் உத்தப்பாவை நான் சந்தித்தால் அந்த சிக்ஸரை நீங்கள் அடித்திருக்க வேண்டும் என்று கூறுவேன். அல்லது எனக்காவது பேட்டிங் செய்யும் வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும் என்று கூறுவேன்.
இதையும் படிங்க:ஆர்சிபி இவரை கழட்டி விட்டது பைத்தியக்காரத்தனமான செயல்.. இவர் இல்லாமல் போனது வேதனை அளிக்கிறது.. ஏ பி டிவில்லியர்ஸ் வருத்தம்
அந்தக் கடைசி ஓவரில் கூட நான் உத்தப்பாவிடம் கூறினேன். ராபி, உங்களை ஆர்பிசிங் ஸ்கூப் ஷாட் ஆட விடப் போவதில்லை. அவர் பந்துகளை லெந்தில் வீசிக் கொண்டிருக்கிறார் எனவே ஸ்லாக் ஆட பாருங்கள் என்று கூறினேன். ஆனால் அவர் கேட்காமல் மூன்றாவது பந்தையும் வீணடித்தார். அப்போதும் கூட அவரிடம் எனக்காக வாய்ப்பு கொடுங்கள் நான் அடிக்கிறேன் என்று கூறினேன். இப்போதும் கூட அவரை சந்திக்கும்போது அந்தப் போட்டியில் நடந்த சம்பவங்கள் குறித்து நினைவு கூறுவோம்” என்று கூறியிருக்கிறார்.

