நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 40 ஆவது போட்டியில் டெல்லி அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற பின் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பரபரப்பான இறுதிக் கட்டத்தில் வெற்றி பெற்றதற்கான காரணம் குறித்து கூறியிருக்கிறார்.
டெல்லி அணியின் சொந்த மைதானமான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய டெல்லி அணி பவர் பிளேவிற்குள் 44 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சிறப்பாக விளையாடிய அக்சர் பட்டேல் 43 பந்துகளில் 66 ரன்களும், அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 43 பந்துகளில் 88 ரன்களும் குவித்தனர். இறுதியாக களம் இறங்கிய ஸ்டெப்ஸ் 7 பந்துகளில் 26 ரன்கள் குவிக்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 என்று குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி குஜராத் அணி களம் இறங்கியது.
குஜராத் அணியும் டெல்லி அணிக்கு சலிக்காமல் ஈடு கொடுத்து ரன் வேட்டையை தொடர்ந்தது. தொடக்க ஆட்டுக்காரர் சகா 39 ரன்களும் சாய் சுதர்சன் 65 ரன்களும் குவித்தனர். மிடில் ஆர்டரில் களம் இறங்கி டேவிட் மில்லர் 23 பந்துகளில் 55 ரன்கள் குவிக்க, ஆட்டம் குஜராத் அணியிடம் நெருங்கி வந்தது. பின்னர் கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 36ரன்கள் தேவைப்பட, ரஷித் கான் இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய போதிலும் 30 ரன்கள் மட்டுமே கொண்டு வர முடிந்தது.
இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றியை பதிவு செய்வது எனவே இந்த வெற்றி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் கூறும் பொழுது
“எங்களது பந்துவீச்சாளர் நோர்க்கியாவுக்கு இது சற்று கடினமான நேரமாக அமைந்துவிட்டது. டி20 கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. 14-15 ஓவர்களுக்கு பிறகு பந்து நன்றாக வந்தது. இன்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ராசிக் ஸலாம் இடம் 19 ஆவது வரை கொடுத்தேன்.
குறிப்பிட்ட போட்டியில் சிறப்பாக பந்து வீசுபவர்களை நம்புவது என்னுடைய வழக்கம். இது எனது உள்ளுணர்வை பற்றியது. இப்படியான உள்ளுணர்வு சில நேரங்களில் நமக்கு கை கொடுக்கும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. 43 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் அவர்களது முக்கிய சுழற் பந்துவீச்சாளர்களை ஏதாவது செய்ய நினைத்தோம். ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய முயற்சி செய்தோம்.
இதையும் படிங்க:ஸ்டெப்ஸ் நிறுத்திய 4 ரன்கள்.. ஆட்டத்தில் ஏற்பட்ட திருப்புமுனை.. 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி திரில் வெற்றி
நான் ஆட்டத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் சிறப்பாக உணருகிறேன். களத்தில் இருக்கும் போது 100% பங்களிப்பை அணிக்காக வழங்க விரும்புகிறேன்.சில நேரங்களில் பௌண்டரியும், சிக்கரும் பெற அதிக நேரம் காத்திருக்க வேண்டும்.
இன்று நான் நடித்த முதல் சிக்சர் எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தது. ஆடுகளத்தில் அதிக நேரம் இருந்ததில் மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.

