எல்லாருக்கும் அவங்க வேலை என்னனு நல்லா தெரியும்.. ஜெய்ஸ்வால் பிரமாதமா விளையாடினார்.. வெற்றிக்கு பின்னர் பேசிய சஞ்சு சாம்சன்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் வெற்றிக்கான காரணத்தைக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களம் இறங்கிய மும்பை அணி டாஸ் வென்று ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் தொடக்கத்திலேயே அற்புதமாக செயல்பட்டதால் 52 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தனர்.

- Advertisement -

இதற்குப் பின்னர் திலக் வர்மா மற்றும் வதேரா ஜோடி சரிந்து கிடந்த மும்பை அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு திலக் வர்மா 65 ரன்களும், வதேரா 49 ரன்களும் குவித்தனர். இறுதியில் மும்பை அணி ரன்களை எடுக்கத் தடுமாறியதால் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 179ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

- Advertisement -

சிறப்பாக பந்து வீசிய சந்திப் சர்மா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் ராஜஸ்தான் அணித்தரப்பில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஜோடியை மும்பை அணி பந்துவீச்சாளர்களால் எந்த நெருக்கடியும் ஏற்படுத்த முடியவில்லை. பட்லர் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, அதற்கு பின்னர் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் ஜெயிஸ்வாலுடன் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தார்.

இறுதியில் ஜெய்ஸ்வால் அபார சதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். 60 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். 28 பந்துகளின் 38 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் வெற்றிக்கு பின்னர் பேசிய பொழுது
“எங்கள் அணியின் அனைத்து வீரர்களும் அற்புதமாக செயல்பட்டனர். நாங்கள் பவர் பிளேவில் நன்றாகத் தொடங்கினோம். திலக் வர்மா மற்றும் வதேரா சிறப்பாக விளையாடினார்கள்.

- Advertisement -

ஆனால் போட்டியில் திரும்பி வந்த விதம்தான் ஆட்டத்தை மீண்டும் வெல்வதற்கு உதவியது. சந்திப் ஷர்மா மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடினார்கள். இங்கு ஆடுகளம் எப்போதும் முதலில் வறண்டு காணப்படும். இரண்டாவதாக பேட்டிங் செய்வதற்கு எளிதாகவும் இருக்கும். போட்டிக்கு நடுவே ஓய்வு கிடைக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதில் வீரர்கள் கவனமாக இருப்பார்கள்.

இதையும் படிங்க:யார் மீதும் குறை கூறப்போவதில்லை.. தோல்விக்கு நாங்களே முழு காரணம்.. தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா

ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடினார். அவருக்கு எந்த அறிவுரையும் சொல்ல தேவையில்லை. எப்போதும் அடுத்த போட்டி குறித்து மட்டுமே யோசிப்போம். லக்னோ அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளது” என்று கூறியிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles