நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட மும்பை அணி தொடக்கத்திலேயே மூன்று முக்கிய விக்கெடுகளை இழந்ததால் அதற்குப் பிறகு வந்த திலக் வர்மா மற்றும் வதேரா ஜோடி மும்பை இந்தியன்ஸ் அணி சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
திலக் வர்மா 45 பந்துகளில் 65 ரன்களும், வதேரா 23 பந்துகளில் 49 ரண்களும் குவித்தனர். ஒரு கட்டத்தில் 200 ரன்களைத் தொடும் என்று எதிர்பார்த்த மும்பை அணிக்கு இறுதி கட்டப் ஓவர்களை ராஜஸ்தான் அணியினர் சிறப்பாக வீசியதால் 179 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் சர்மா சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெயிஸ்வால் அபார சதத்தால் வெற்றி இலக்கை எட்டியது. ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 104 ரன்கள், பட்லர் 25 பந்துகளில் 35 ரன்கள், சாம்சன் 28 பந்துகளின் 38 ரன்களும் குவித்தனர். இந்த தோல்விக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா சில முக்கியக் கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது
“எங்கள் அணியின் தோல்விக்கு நாங்கள்தான் காரணம். தேவையில்லாத அழுத்தத்தை நாங்களே ஏற்படுத்திக் கொண்டோம் திலக் வர்மா மற்றும் வதேரா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். தொடக்கத்திலேயே சில முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் 180 ரன்கள் எட்ட முடியும் என்று நினைக்கவில்லை. பேட்டிங்கின் போது கடைசி கட்ட ஓவர்களை சரியாக பயன்படுத்தாத காரணத்தினால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை.
10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். மேலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படவில்லை சில முக்கிய கேட்ச்களைத் தவிர விட்டோம். எந்த விரையும் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டுவது சரியாக இருக்காது ஏனெனில் அனைவரும் தொழில் முறை கிரிக்கெட் வீரர்கள். எங்களது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:தொடரும் 11 வருட சோகம்.. மும்பையை நொறுக்கிய ஜெயஸ்வால்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி
ராஜஸ்தான் அணி எங்களை விட அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டது. ஒரு அணியாக நாங்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஓரிரு போட்டிகளில் முடிவை பொறுத்து வீரர்களை நீக்குவது சரியாக இருக்காது. எனது வீரர்களுக்கு ஆதரவு தருவது முக்கியம். அடுத்த போட்டியில் வெற்றி பெற முயற்சிப்போம்” என்று கூறுகிறார்.

