தொடரும் 11 வருட சோகம்.. மும்பையை நொறுக்கிய ஜெயஸ்வால்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

- Advertisement -

டாசை இழந்து முதலில் பந்து வீசிய இராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது அபார பந்து வீச்சினால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலமான பேட்டிங் வரிசையை கடைசி கட்ட ஓவர்களில் சீர்குலைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே போல்டின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து வெளியற்றினார்.

- Advertisement -

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இசான் கிசான் டக் அவுட் ஆகி வெளியேற, பின்னர் திலக் வர்மா உடன் வதேரா ஜோடி சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி சரிவில் இருந்து மீட்டனர். திலக் வர்மா 65 ரன்களும் வதேரா 49 ரன்கள் குவிக்க அதற்கு பின்னர் வந்த மும்பை பேட்ஸ்மேன்களால் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியவில்லை.

- Advertisement -

இதனால் இறுதியாக மும்பை ஒன்பது விக்கெட் இழந்து 20 ஓவர்களில் 179 ரன்கள் குவித்தது. அபாரமாக பந்து வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சந்திப் சர்மா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் பட்லர் 35 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேற மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் இந்த முறை நிலைத்த நின்று விட்டார். மறுமுனையில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இவருக்கு கை கொடுக்க மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுரமும் சிதறடித்தார்.

- Advertisement -

60 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஜெஸ்வால் ஒன்பது பவுண்டரி, ஏழு சிக்ஸர்களுடன் 104 ரன்கள் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற முக்கிய பங்காற்றினார். மறுமுனையில் சாம்சன் 28 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் இரண்டு சிக்ஸ்கள் என 38 ரன்கள் விளாசினார்.

இதையும் படிங்க:4 ஓவர்..18 ரன்.. 5 விக்கெட்.. மும்பை இந்தியன்சை கதறவிட்ட சந்தீப் சர்மா.. ஹர்திக் பாண்டியா சொதப்பல் பேட்டிங்

இந்த தோல்வியின் மூலம் மும்பை அணிக்கு 11 வருடங்களாக ராஜஸ்தான் அணியை ஜெய்பூரில் வீழ்த்த முடியாத சோகம் நீடிக்கிறது. இந்தப் போட்டியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் கம்பீரமாக நீடிக்கிறது. எட்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த தோல்வி ஐந்தாவது தோல்வியாக அமைந்திருக்கிறது. இனி மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற விரும்பினால் வெற்றி கணக்கை தொடங்க வேண்டியது மிகவும் அவசியம். மும்பை இந்தியன்ஸ் அணி தனது அடுத்த போட்டியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் வருகிற சனிக்கிழமை மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles