குஜராத் உலகத் தரமான சுழற்பந்து கூட்டணியை வைத்துள்ளனர்.. இந்தப் பெருமை சாய் கிஷோரையே சேரும்.. தோல்விக்கு பின்னர் சாம் கரண் பேட்டி

நேற்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இப்போட்டியில் போராடி தோல்வி அடைந்த பஞ்சாப் அணியின் கேப்டன் ஷாம் கரண் தோல்விக்கான காரணத்தை கூறியிருக்கிறார். பஞ்சாப் அணியின் சொந்த மைதானமான முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

பேட்டிங் தேர்வு செய்து நன்றாகவே விளையாடி வந்த பஞ்சாப் அணி பவர் பிளேவரை ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் குவித்திருந்தது. ஆனால் அதற்குப் பிறகு சரிவு ஆரம்பிக்கும் என்று பஞ்சாப் அணி நினைத்து பார்க்கவில்லை. குஜராத் அணியின் சுழற் பந்து வீச்சு கூட்டணி பஞ்சாப் அணியை சுக்கு நூறாக ஆக நொக்கியது. 56 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த குஜராத் அணி மேற்கொண்டு 142 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

சிறப்பாக பந்து வீசிய சாய் கிஷோர் நான்கு ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து, நான்கு விக்கெடுகளை வீழ்த்தினார். மற்றொரு ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளரான நூர் அகமது நான்கு ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு, தொடக்கம் ஓரளவு சிறப்பாக அமைந்தது.

தொடக்கத்தில் கில் 35 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க, கடைசி கட்டத்தில் ராகுல் திவாட்டியா 36 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த தோல்விக்கு பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் ஷாம் கரண் கூறும் பொழுது
“நாங்கள் பேட்டிங்கில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்தது தோல்விக்கு காரணமாக நினைக்கிறேன். மேலும் எங்கள் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்து வருகிறது.

- Advertisement -

ஆனால் அது கடைசி கட்டத்தில் வெற்றி பெற போதுமானதாக இல்லை. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு கூட்டணி உலகத்ரமாக இருக்கிறது. மேலும் இப்போட்டியில் சாய் கிஷோர் அற்புதமாக பந்து வீசினார். முக்கிய விக்கெடுகளை வீழ்த்திய பெருமை அவருக்கே சேரும். இந்த ஆடுகளத்தில் நாங்கள் மூன்றாவது போட்டியில் விளையாடுகிறோம் 160 ரன்கள் குவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:வாய்ப்புக்காக 1 மாதம் காத்திருந்தேன்.. நெக்ராவின் வார்த்தைகள் சிறப்பாக செயல்பட உதவியது.. ஆட்டநாயகன் சாய் கிஷோர் பேட்டி

பவர் பிளேவரை நன்றாக தொடங்கினோம். ஆனால் அதற்கு பிறகு ஆட்டம் துரதிஷ்டவசமாக போட்டி எங்கள் கையை விட்டுப் போனது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவோம் இனிவரும் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles