வாய்ப்புக்காக 1 மாதம் காத்திருந்தேன்.. நெக்ராவின் வார்த்தைகள் சிறப்பாக செயல்பட உதவியது.. ஆட்டநாயகன் சாய் கிஷோர் பேட்டி

நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் குஜராத் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு சிறப்பாக செயல்பட்ட சாய் கிஷோர் குஜராத் அணியில் திரும்ப வாய்ப்பு பெற்றது குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி பவர் பிளே வரை நல்ல நிலைமையில் இருந்தது. 56 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று இருந்த பஞ்சாப் அணியை அடுத்த 84 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமிருந்த ஒன்பது விக்கெட்டுகளையும் இழந்தது. 20 ஓவர்களில் மொத்தமாக அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 142 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

பஞ்சாப் அணியின் விக்கெட் வீழ்ச்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் முக்கிய காரணமாக அமைந்தார். அவர் பந்து வீசி சஷாங்க் சிங், அசிடோசர்மா, ஜிதேஷ் ஷர்மா மற்றும் ஹர்பிரித் பிரார் என்ற நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு அணியின் கேப்டன் கில் 35 ரன்கள், சாய் சுதர்சன் 31 ரன்களும் குவித்தனர். பின்னர் இறுதிக்கட்டத்தில் 18 பந்துகளில் ஏழு பவுண்டர்களை விளாசி 36 ரன்கள் குவித்து ராகுல் திவாட்டியா குஜராத் அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் 19 ஓவர்களில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் 146 ரன்கள் குவித்து குஜராத் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத் அணிக்கு முக்கிய பங்காற்றிய சாய் கிஷோர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“கிட்டத்தட்ட 20 முதல் 25 நாட்களுக்கு பிறகு எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் என்னால் முடிந்த அளவு 120 சதவீதம் பங்களிப்பை அளிக்க விரும்பினேன். இதனால் களத்திற்கு சென்று ஆட்டத்தை முழுவதுமாக ரசித்து விளையாட நினைக்கிறேன்.

- Advertisement -

எந்த நிலையில் களம் இறங்கி விளையாடினாலும் பயமில்லாமல் விளையாடும் உணர்வை நெக்ரா எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். என்னை போட்டியை அச்சமின்றி சுதந்திரமாக விளையாட கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். நான் எனது உள்ளுணர்வின் அடிப்படையில் பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தேன். இந்த ஆடுகளத்தில் வேகத்தை மாற்றி வீசுவதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று உணர்ந்தேன்.

இதையும் படிங்க:விராட் கோலி அவுட் சர்ச்சை.. அது நோ-பால் என்று நினைத்தோம்.. தோல்விக்கு பின்னர் பேசிய டூ ப்ளஸ்சிஸ்

பேட்டிங்கில் ராகுல் திவாட்டியா சிறந்த பங்களிப்பை வழங்கினார். பந்து வீச்சில் ரஷித் கான் மற்றும் நூர் அகமது ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர்” என்று கூறியிருக்கிறார். இந்த போட்டியின் மூலம் குஜராத்த அணி நான்காவது வெற்றியை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles