விராட் கோலி அவுட் சர்ச்சை.. அது நோ-பால் என்று நினைத்தோம்.. தோல்விக்கு பின்னர் பேசிய டூ ப்ளஸ்சிஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. விராட் கோலியின் அவுட் சர்ச்சை குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் முக்கிய கருத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

டாசை இழந்த கொல்கத்தா அணி போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 50 ரன்கள் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரமன் தீப் சிங் 9 பந்துகளில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 24 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 222 ரன்கள் என்ற மெகா இலக்கை நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, நம்பிக்கை நட்சத்திரம் விராத் கோலி 18 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், அதற்குப் பிறகு களம் இறங்கிய வில் ஜேக்ஸ் மற்றும் பட்டிதார் கூட்டணி அபாரமாக விளையாடியது.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய வில் ஜேக்ஸ் 32 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என 55 ரன்கள் குவித்து வெளியேற, மற்றொரு முனையில் பட்டிதார் 23 பந்துகளில் 52 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் கடைசி ஓவரில் 21 ரன்கள் பெங்களூர் அணியின் வெற்றிக்கு தேவைப்பட மூன்று அபாரமான சிக்சர்களை விளாசிய கரன்சர்மா கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரே ரன் மட்டுமே கிடைக்க, ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பெங்களூர் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது விராட் கோலி 18 ரன்கள் குவித்திருந்த போது, அவர் சந்தித்த ஏழாவது பந்து இடுப்புக்கு மேலே சென்று ஃபுல் டாஸ் ஆக வந்தது. எதிர்பாராத விதமாக பேட்டில் வாங்கி அவுட் ஆனார் ஆனால் நோபல் என்று நினைத்தபோது நடுவர் அவுட் என்று அவுட் கொடுத்துவிட்டார்.

- Advertisement -

இது தற்போது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசஸ்
“இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஆனால் கடைசியாக விதி என்பது விதிதான். விராட் கோலிக்கு வீசப்பட்ட அந்த பந்தை நானும் கோலியும் நோபால் என்று நினைத்தோம். ஏனெனில் அந்த பந்து இடுப்புக்கு மேல் உயரமாக வந்தது. அவர்கள் விராட் கோலி கிரீசை விட்டு இறங்கிய தூரத்திலிருந்து கணக்கெடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதை ஒரு அணியால் ஏற்றுக் கொள்ள முடியாது இன்னொரு அணி ஏற்றுக் கொள்கிறது.

இதையும் படிங்க:பரபரப்பான ஆட்டத்தில் 1 ரன்னில் கேகேஆர் த்ரில்லர் வெற்றி.. தொடரும் ஆர்சிபி யின் சோகம்.. கரன் சர்மா அதிரடி வீண்

டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாது. இன்று எங்கள் வீரர்கள் செயல்பட்ட விதம் அருமையாக இருந்தது. எங்களுக்கு மிகச் சிறப்பான ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர்களை மகிழ்விக்க இனி வரும் அடுத்தடுத்த போட்டிகளில் எங்களால் முடிந்தளவு சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்துவோம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles