பரபரப்பான ஆட்டத்தில் 1 ரன்னில் கேகேஆர் த்ரில்லர் வெற்றி.. தொடரும் ஆர்சிபி யின் சோகம்.. கரன் சர்மா அதிரடி வீண்

கொல்கத்தாவில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில்லர் வெற்றியை பெற்றது.

- Advertisement -

வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமையில் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரேன் களம் இறங்கினர். சுனில் நரேனுக்கு யார்க்கர் பந்துகளை வீசும் திட்டத்தில் வந்திருந்தது பெங்களூர் அணி. இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பில் சால்ட் 14 பந்துகளில் 7 பவுண்டரி, மூன்று சிக்சர் என 48 ரன்கள் குவித்து வெளியேறினார்.

- Advertisement -

மறுமுனையில் 15 பந்துகளில் 10 ரன்கள் குவித்த நிலையில் சுனில் நரேன் அவுட் ஆனார். அதற்குப் பிறகு களம் இறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என ஐம்பது ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். பின்னர் இறுதி கட்டத்தில் விளையாடிய ரமன் தீப் சிங் 9 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் 24 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி 7 பந்துகளில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 18 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, பிறகு ஒன்டவுனில் களமிறங்கிய வில் ஜேக்ஸ் இந்த முறை அபாரமாக விளையாடினார். 32 பந்துகளை எதிர்கொண்ட அவர் நான்கு பவுண்டரி, 5 சிக்சர்கள் என 55 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.

அவருக்கு பக்க பலமாக இருந்த பட்டிதார் 23 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். பின்னர் இறுதிக்கட்டத்தில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட, கடைசி ஓவர் மிச்சல் ஸ்டார்க் வீசினார். அவரை எதிர்கொண்ட கரன்சர்மா முதல் பந்தை சிக்சருக்கு விலாச இரண்டாவது பந்தில் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.

- Advertisement -

மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் தலா இரண்டு சிக்சர்களை விலாசிய நிலையில் ஐந்தாவது பந்தில் ஸ்டார்க்கிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார் கரண் ஷர்மா. பிறகு ஒரு பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட லாக்கி பெர்க்ஷன் அவரை எதிர்கொண்டார். கடைசி பந்தை அடித்து விட்டு இரண்டாவது ரன்னுக்கு செல்லும் போது பில் சால்டால் ரன் அவுட் செய்யப்பட ஆர்சிபி அணி ஒரு ரன்னில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க:ரோகித் சர்மாவிற்கு பிறகு.. இந்திய அணியின் கேப்டனாக இவருக்கே வாய்ப்பு அதிகம்.. கூறுகிறார் சுரேஷ் ரெய்னா

இதனால் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று ஐந்தாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. பரிதாபமான பெங்களூர் அணிக்கு இந்தப் போட்டி ஏழாவது தோல்வியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles