சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கணோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மகேந்திர சிங் தோனி ரசிகர்களை பார்த்து செய்த செயல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது. அதில் மகேந்திர சிங் தோனி இறுதியாக களமிறங்கி 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் இரண்டு சித்தர்கள் என விழாசி 28 ரன்கள் குவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 19 ஓவர்களில் 180 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் லக்னோ அணி 7 போட்டிகளில் நான்காவது போட்டியில் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதை நான் வெற்றிகளை பெற்று நான்காவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“கற்றோர்க்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு” என்பது போல மகேந்திர சிங் தோனிக்கு இந்தியாவில் எங்கு சென்றாலும் ரசிகர்களின் வரவேற்பு என்பது அமோகமாக இருந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவு என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆனால் சென்னையை தவிர்த்து வெளி மாநிலங்களில் சிஎஸ்கே எங்கு சென்று விளையாடினாலும், அந்த அணி ரசிகர்களை மகேந்திர சிங் தோனிக்கு ஆதரவாக இருப்பது தான் சிறப்பிலும் சிறப்பு. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கனோவில் முதலில் பேட்டிங் செய்து முடித்துவிட்டு இரண்டாவது ஆக பந்து வீச தயாராகிக் கொண்டிருந்தது.
அப்போது பவிலியினில் மகேந்திர சிங் தோனி மற்றும் கேப்டன் ருத்ராஜ் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த ரசிகர்கள் மகேந்திர சிங் தோனியை பார்த்து தோனி தோனி என்று கரகோஷங்களை எழுப்ப, அதனை கண்ட மகேந்திர சிங் தோனி ரசிகர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். இதனை பார்த்த ரசிகர் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இதையும் படிங்க:நடராஜன் ஒரு கடின உழைப்பாளி.. ஆனால் அவர் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.. புவனேஸ்வர் குமார் பேட்டி
ரசிகர்கள் எந்த அளவு தோனியின் மீது மரியாதை வைத்துள்ளனர் ஓ அதேபோல மகேந்திர சிங் தோனியும் ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பினை வைத்துள்ளார் என்பதற்கு இந்த ஒரு காட்சி உதாரணம். தோனியின் இத செயலை கண்ட ரசிகர்கள் தற்போது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
" Dhoni Dhoni" Chants then MS Dhoni turns back and acknowledge the fans for their love 💛 pic.twitter.com/ehCHN9w77n
— 🎰 (@StanMSD) April 20, 2024

