42 வயசுல தோனியால மட்டும் இது எப்படி முடியுது.. ரொம்ப பசியோட இருக்காரு.. தோனி குறித்து வியப்படையும் டாம் மூடி

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் போது மகேந்திர சிங் டோனி சிறப்பாக விளையாடி 9 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதனைக் கண்ட ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டர் டாம் மூடி மகேந்திர சிங் தோனி இன்னும் ரன் வேட்டையில் அதிக பசியுடன் இருப்பதாகக் கூறி இருக்கிறார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. 18-வது ஓவர்கள் வரை 146 ரன்கள் உடன் மட்டுமே இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் வருகைக்குப் பிறகு ரன் வேகம் அதிரடியாக உயர்ந்தது.

- Advertisement -

18 வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய தோனி 19 ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 28 ரன்கள் மொத்தமாக விளாசினார். இதனால் குறைவாக இருந்த சென்னை அணியின் ரன் வேகம் இதற்கு பின்னர் அதிகரித்தது. சற்று சவாலான இலக்கை நிர்ணயித்த சென்னை அணி அதன் பிறகு லக்னோ அணிக்கு எதிராக பந்து வீசியது.

- Advertisement -

ஆனால் லக்னோ அணி சிறப்பாக விளையாடி ரன் இலக்கை 19ஆவது ஓவரில் அடைந்து வென்றது. சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.
சென்னை அணி தோல்வி அடைந்திருந்தாலும் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது.

தோனி அதிக பசியுடன் இருக்கிறார் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்த அவர் கூறும் பொழுது
“மிகக் குறைவான அளவிலேயே பயிற்சி பெறும் ஒரு வீரருக்கு அனைத்து துப்பாக்கிகளும் எரிந்து கொண்டு வெளியே வருவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. மகேந்திர சிங் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது.

- Advertisement -

இன்னமும் அதே உடற் தகுதி, போட்டியில் அதே கவனம், ரன்களை வேட்டையாட கூடிய பசியுடன் காணப்படுகிறார். ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வருவதற்கு முன்பு எந்த வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதில்லை. இப்படி ஒரு கடினமான சூழ்நிலையில் இருந்து வெளியே வந்து அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக விளையாடுவது உண்மையிலேயே நம்ப முடியாத வகையில் இருக்கிறது என்று வியப்படைந்தார்.

இதையும் படிங்க:தோனி என்ட்ரியால் அதிர்ந்த மைதானம்.. அலறிய ஸ்மார்ட் வாட்ச்.. பயந்த டி காக்கின் மனைவி

டாம் மூடி கூறுவதைப் போல மகேந்திர சிங் தோனி இந்த சீசனில் மிகவும் பிட்டாக தெரிகிறார். கடந்த சீசனை காட்டிலும் இந்த சீசன் அவரது பேட்டிங் திறன் இன்னமும் மெருகேறி இருக்கிறது. எனவே அவர் இன்னும் இரண்டு சீசன்களில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles