எனது கிரிக்கெட் வாழ்வின் மிகச் சிறந்த தருணம் தோனி எனக்கு இதைக் கொடுத்ததுதான்.. தோனியை புகழ்ந்து பேசியிருக்கும் கே எல் ராகுல்

லக்னோ அணியின் கேப்டன் ஆன கேஎல் ராகுல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஆன மகேந்திர சிங் தோனி பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிக் கொண்டிருக்கும் கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் முதல் முதலாக பெங்களூர் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு பஞ்சாப் அணியில் கேப்டன் பொறுப்பை ஏற்றவர், அதற்குப் பிறகு 2022ஆம் ஆண்டு புதிதாக துவங்கப்பட்டுள்ள லக்னோ அணியில் கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடிக் கொண்டிருக்கிறார். 2022ஆம் ஆண்டு லக்னோ அணி பிளே ஆப் சுற்று வரை முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவர் தலைமையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி மூன்று போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியையும் தழுவி தற்போது புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெற உள்ள 33வது ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட உள்ளன.

- Advertisement -

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் வலுவாக இருக்கும் சென்னை அணியை லக்னோ அணி சமாளித்து வெற்றி பெறுமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் லக்னோ அணியின் கேப்டன் என கே எல் ராகுல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் டோனி குறித்து புகழ்ந்து பேசி இருக்கிறார்.

தோனியுடன் கிரிக்கெட்டில் இணைந்து விளையாடியது சிறப்பான அனுபவம் என்று கூறி இருக்கும் அவர் இது குறித்து விரிவாக கூறும்பொழுது
“மகேந்திர சிங் தோனி எப்போதுமே மனதில் எதையும் வைக்காமல் பேசக்கூடிய ஒரு வெளிப்படையான நபர் ஆவார். அவரிடமிருந்து ஒரு நாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான அறிமுக தொப்பியை அவரிடம் இருந்து பெற்றேன். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய தருணம் ஆக இன்றும் இருக்கிறது.

- Advertisement -

மகேந்திர சிங் தோனிதான் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவரிடம் இருந்த தொப்பியை பெற்றதுதான் எனது வாழ்வின் மிகச் சிறந்த தருணங்களில் அது முதல் இடத்தில் எப்போதுமே இருக்கும். மேலும் அவருடன் இணைந்து விளையாடியது எனது வாழ்வின் ஸ்பெஷலான தருணங்களாகும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:அடேங்கப்பா.. விராட் கோலி போலவே இருக்கும் அச்சு அசல் மெழுகு சிலை.. இதன் எடை எத்தனை கிலோ தெரியுமா?

மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட்டில் இருந்து எப்போதோ ஓய்வு பெற்று விட்டாலும், அவர் அறிமுகம் செய்த வீரர்கள், அவர் படைத்த சாதனைகள் என்றும் அவரது பெயரை மறக்காமல் நினைவு கூர்ந்து கொண்டே இருக்கும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles