சும்மா யாரும் தூக்கி கொடுக்கல.. தோனி போட்ட சீக்ரெட் மாஸ்டர் பிளான்.. பிளமிங் வைத்த டெஸ்ட்.. ரகசியத்தை உடைக்கும் ருத்துராஜ்

2024 ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி திடீரென தனது கேப்டன் பதவியை விட்டு விலகி ருத்ராஜ் வசம் ஒப்படைத்தார்.

- Advertisement -

திடீரென அனுபவம் இல்லாத ஒரு இளம் வீரருக்கு கேப்டன்சியை வழங்கினால், அவரால் எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வாரா? என்பது போன்ற கேள்விகள் எழுந்த நிலையில் ருத்ராஜ் சிறப்பாகவே செயல்பட்டு 5 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். பேட்டிங்கிலும் தற்போது சிறந்த பார்முக்கு வந்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் திடீரென ருத்ராஜிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மகேந்திர சிங் தோனியும் ஸ்டீபன் பிளம்மிங்கும் இதற்காக ருத்ராஜை மெருகேற்றி வந்திருக்கின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியை விட்டு விலகி அவரது சிஷ்யரான ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார்.

- Advertisement -

ஆனால் ரவீந்திர ஜடேஜாவால் சிஎஸ்கேவை வெற்றிகரமாக வழி நடத்த முடியவில்லை. அதனால் 2022 ஆம் ஆண்டு சென்னை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இருப்பினும் அந்த சீசன் பாதியிலேயே மகேந்திர சிங் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார். இது குறித்த தகவல்களை சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் கொல்கத்தா அணியின் போட்டிக்குப் பின்னருடனான செய்தியாளர் சந்திப்பில் மகேந்திர சிங் தோனி கூறிய விஷயங்கள் குறித்து கூறியிருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் சென்னை அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த பின்னர் மகேந்திர சிங் தோனி கெயிக்வாட்டை சந்தித்து
“இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக உனக்கு வாய்ப்பு கிடைக்கும். அதற்கு இப்போது இருந்தே உன்னை தயார்படுத்திக் கொள்” என்று தோனி அவரிடம் கூறியதாக தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் 2023ஆம் ஆண்டிலிருந்து ருத்ராஜ் கேப்டன்சிக்கு சரியான நபர்தானா? என்று பயிற்சியாளர் பிளமிங் சோதனையை தொடங்கி இருக்கிறார்.

- Advertisement -

2023ஆம் ஆண்டு சிஎஸ்கேவின் ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் ருத்ராஜ் கேப்டனாக இருந்திருந்தால் என்ன முடிவுகளை எடுத்திருப்பார் என்று அவரிடமே கருத்துக்களை கேட்டு இருக்கிறார். பின்னர் கேப்டன்ஷிக்கு தேவையான ஆலோசனைகளையும் பயிற்சியாளர் பிளமிங் வழங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க:எங்கள் ஆட்டத்தை மாற்றியதே இவர்தான்.. இந்த பையனோட பேட்டிங் அபாரமா இருக்குது.. வெற்றிக்கு பின்னர் கம்மின்ஸ் பேட்டி

இப்படி இரண்டு ஆண்டுகளாகவே ருத்ராஜை இதற்காக தீவிரமாக தயார்படுத்தி வந்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மகேந்திர சிங் தோனி அவ்வளவு எளிதாக யாருக்கும் ஒரு பொறுப்பை கொடுத்து விட மாட்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த நிலையில், திடீரென இந்த முடிவை எடுக்கவில்லை என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது. தற்போது வெற்றி பாதைக்கு வந்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதே போல எஞ்சிய போட்டிகளையும் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்பதை அனைத்து சென்னை ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles