எங்கள் ஆட்டத்தை மாற்றியதே இவர்தான்.. இந்த பையனோட பேட்டிங் அபாரமா இருக்குது.. வெற்றிக்கு பின்னர் கம்மின்ஸ் பேட்டி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

- Advertisement -

பஞ்சாபின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாசை இழந்த சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் 21 ரன்களிலும், அபிஷேக்ஷர்மா 16 ரன்களிலும் வெளியேற, அனுபவ வீரரான மார்க்ரம் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதற்குப் பின்னர் வந்த இளம் வீரரான நித்திஷ் ரெட்டி மிகச் சிறப்பாக விளையாடி அணியைக் கரை சேர்த்தார்.

- Advertisement -

இவருக்கு அப்துல் சமாத் மட்டும் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுக்க, இருபது ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிதரப்பில் ஹர்ஸ்தீப் சிங் 4 ஓவர்கள் வந்து வீசி 29 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்கள் அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக கை கொடுக்கவில்லை. மிடில் ஆர்டரில் களமிறங்கும் இரண்டு சிறந்த வீரர்களான சசாங்க் சிங் மற்றும் அசிடோஸ் சர்மா இந்த முறையும் களத்தில் போராடினார். சசாங்க் சிங் 25 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 46 ரன்களும், அசிடோஸ் சர்மா 15 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 33 ரன்கள் விளாசினார்.

ஆனால் வெற்றி இலக்கிற்கு நெருங்கி வந்தும் பஞ்சாப் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. எனவே வெற்றி பெற்றது குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது
“இது மிகவும் சிறப்பான ஆட்டம். பஞ்சாப் அணியினர் முதலில் சிறப்பாக பந்து வீசினார்கள். நாங்கள் 180 ரன்கள் குவிப்பதற்கு இறுதிக்கட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தோம்.

- Advertisement -

ஆனால் போட்டி இறுதிவரை மிக நெருக்கமாக வந்துவிட்டது. இம்பேக்ட் பிளேயரின் அழகு நீங்கள் போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று பெரிய ஸ்கோர் குவிக்க முயற்சி செய்ய வேண்டும். எப்போதுமே பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்பதே எனது திட்டம். 150 முதல் 160 ரன்கள் வரை குவித்தால் நீங்கள் 10 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் தோல்வியை தருவதுதான் செய்வீர்கள். எனவே ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது மிகவும் அவசியம். புதிய பந்து அவர்களுக்கு எதிராக எவ்வாறு வேலை செய்தது என்பதை பார்த்தோம்.

இதையும் படிங்க: நாங்க இதே மாதிரி விளையாடினா வேலைக்கே ஆகாது.. அந்த இரண்டு இளைஞர்களுக்கும் நன்றி.. தோல்விக்குப் பின்னர் ஷிகர் தவான் பேட்டி

எனவே நான் புவியுடன் இணைந்து ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த திட்டம் வகுத்தேன். எங்கள் அணியின் நித்திஷ் ரெட்டி மிகவும் சிறப்பாக விளையாடினார். கடந்த வாரம் சன்ரைசர்ஸ் அணிக்கு அறிமுகமாகி இந்த வாரம் பேட்டிங் ஆர்டரின் டாப் பொசிஷனுக்கு வந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் மூன்று ஓவர்கள் பந்தும் வீசி இருக்கிறார். 180 ரன்கள் குவித்தது அவருடைய பேட்டிங் மூலமாகத்தான் என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles