நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி நெருங்கி வந்து இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமான தோல்வியைச் சந்தித்தது. தோல்விக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் சில உணர்வுபூர்வமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, இந்த முறை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் கை கொடுக்கவில்லை. மாறாக மிடில் ஆர்டரில் களமிறங்கிய நித்திஷ் ரெட்டி அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 67 ரன்கள் குவித்தார்.
இறுதியாக அப்துல் சமாத் 12 பந்துகளில் 25 ரன்கள் விலாச, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை போல டாப்பர் பேட்ஸ்மேன்கள் கை கொடுக்கவில்லை. இருப்பினும் சாம் கரண் 29 ரன்களும், சிக்கந்தர் ராசா 28 ரன்களும் குவிக்க பஞ்சாப் அணி ஓரளவு மேலே உயர்ந்தது.
பின்னர் அதற்குப் பிறகு களம் இறங்கிய சஷாங்க் சிங் அசிடோசர்மா ஆகியோர் குஜராத் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடியதைப் போலவே பஞ்சாப் அணியிலும் தொடர்ந்தார்கள். இருப்பினும் இறுதிவரை போட்டியை எடுத்துச் சென்ற இந்த இரண்டு வீரர்கள் கடைசியாக இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட, உனத் கட் வீசிய ஓவரில் முதல் நான்கு பந்துகளில் 19 ரன்கள் வந்தது.
பின்னர் கடைசி இரண்டு பந்துகளில் ஐந்தாவது பந்தில் ஒரு ரன்னும், ஆறாவது பந்தில் சிக்சரும் விலாச, இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் சசாங்க் சிங் 25 பந்துகளில் 46 ரன்களும், அசிடோசர்மா 15 பந்துகளில் 33 ரன்களும் குவித்தனர். நெருங்கி வந்த தோல்வியை தழுவிய பஞ்சாப் அணிக்கு அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறும் பொழுது
“இளம் வீரர்களான சசாங்க் சிங் மற்றும் அசிட்டோஸ் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் சரியான அளவில் அவர்களுக்கு ரன்கள் கொடுத்ததாக நினைத்தோம்.
நாங்கள் பவர் பிளேவில் ரன்கள் போதிய அளவு எடுக்கவில்லை. இந்த இடத்தில்தான் நாங்கள் ஆட்டத்தினை இழந்தோம். ஆடுகளம் கொஞ்சம் பவுன்ஸ் குறைவாக இருந்தது. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தனியான திட்டத்துடன் வரவேண்டும். பீல்டிங்கும் மாற்றி ஆக வேண்டும். மேலும் பில்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க:நூலிழையில் தப்பித்த சன்ரைசர்ஸ்.. 6 பந்து 27 ரன்.. போராடி தோல்வி அடைந்த பஞ்சாப்
இந்த இரண்டு இளம் வீரர்கள் இந்த அளவு சிறப்பாக விளையாடுவது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இவ்வளவு தூரம் ஆட்டத்தை எடுத்து வந்தது அடுத்த போட்டியை நாங்கள் நம்பிக்கையாக எதிர்கொள்ள உதவி இருக்கிறது. நாங்கள் இன்னும் சில வேலைகளை செய்ய வேண்டி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

