இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 23வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப்கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் பரபரப்பான இறுதிக்கட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்தது.
பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் 21 ரன்களும், அபிஷேக் சர்மா 11 பந்துகளில் 16 ரன்களும் குவித்து வெளியேறினர். இந்த முறை இவர்களது அதிரடி தொடக்கம் ஹைதராபாத் அணிக்கு கை கொடுக்கவில்லை.
இதற்குப் பிறகு மார்க்ரம், திருப்பாதி மற்றும் ஹென்றி கிளாஸன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இறந்து வெளியேற, சிக்கலில் மாட்டிய ஹைதராபாத் அணியை நித்திஷ் ரெட்டி மற்றும் அப்துல் சமாத் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை ஹைதராபாத் அணிக்கு வழங்கினார்.
அப்துல் ஷாமத் 12 பந்துகளில் 25 ரன்கள் குவித்து வெளியேற, நித்திஷ் ரெட்டி 37 பந்துகளில் நான்கு பவுண்டரி 5 சிக்சர் என 64 ரன்கள் குவித்தார். இதனால் இறுதியில் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிதரப்பில் ஹர்ஸ்தீப் சிங் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 183 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஷ்டோ இந்த முறை டக் அவுட் ஆகி வெளியேற, அணியின் கேப்டன் சிகார் தவான் 14 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு ஷாம் கரண்(29) மற்றும் சிக்கந்தர் ராசா(22) ஆகியோர் ஓரளவு சிறப்பாக விளையாட, அணி ஓரளவு மீண்டது.
அதன் பிறகு கடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கலக்கிய ஷஷாங்க் சிங் மற்றும் அசுடோஸ் சர்மா ஆகியோர் இந்த முறையும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மிகச் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி கடைசி கட்டத்தில் ஆறு பந்துகளுக்கு 29 ரன்கள் தேவை என்று நிலையில், கடைசி ஓவர் உனாத் கட் வீச அதனை அசுடோஸ் சர்மா எதிர்கொண்டார்.
முதல் பந்தை சிக்சர்க்கு விளாசிய அசுடோஸ் சர்மா, அந்த ஓவரில் சேர்த்து முதல் நான்கு பந்துகளில் 19 ரன்கள் கிடைக்க, கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் ஒரு ரன்னை மட்டுமே எடுத்துவிட்டு ஆறாவது பந்தில் சசாங்க் சிங் ஒரு சிக்சரை விளாசினார். இதனால் இறுதியாக சன்ரைசர்ஸ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் கவனக்குறைவான ஆட்டமே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

