பாண்டியா அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரு.. சிஎஸ்கே வீரர் ரெடியா இருக்காரு.. டி20 உலக கோப்பைக்கான பேட்டிங் ஆர்டர் குறித்து வெங்கடேஷ் பிரசாத்

17வது ஐபிஎல் சீசன் தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரை பொறுத்தே டி20 உலக கோப்பைக்கான வீரர்கள் பெரும்பாலும் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால், இந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு மோசமான தொடராகவே இருந்து வருகிறது.

- Advertisement -

இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 110 ரன்களை மட்டுமே குவித்திருக்கிறார். இதுவரை மந்தமான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ள ஹார்த்திக் பாண்டியா டி20 உலக கோப்பையில் இடம் பெற வேண்டுமானால், இனி வரும் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் என்று பார்த்தால் அதில் சிவம் தூபே முன்னணியில் இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான இவர், சுமாராக விளையாடிய பின்னர் பெங்களூரு அணியில் விளையாடினார். பின்னர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவர் இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2022ஆம் ஆண்டு நுழைந்தார். அதிரடியாக விளையாடி வரும் சிவம் டுபே கடந்த சீசனில் 35 சிக்ஸர்களுடன் 418 ரன்களைக் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 160 ஸ்ட்ரைக் ரேட்டில் 176 ரன்களைக் குவித்து இருக்கிறார். எனவே இவர் உலகக்கோப்பை டி20 அணியில் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் கூறியுள்ளனர். இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் பினிஷர் ரோலுக்கு ரிங்கு சிங் பொருத்தமாக இருப்பார் என்று வெங்கடேஷ் பிரசாத் கூறியிருக்கிறார்

- Advertisement -

டி20 உலக கோப்பைக்கான உத்தேச அணியை தேர்ந்தெடுத்துள்ள அவர், மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபேவை தேர்ந்தெடுத்துள்ள அவர் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் தெரிவிக்கும் பொழுது
“ஸ்பின்னர்களுக்கு எதிராக சிவம்தூபே அபாரமாக விளையாடி வருகிறார். சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட் பொருத்தவரை அபாயகரமான பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். ரிங்கு சிங்கிடம் பினிஷிங் செய்யும் திறமை இருக்கிறது. எனவே டி20 உலக கோப்பையில் இந்த மூன்று வீரர்களுடன் மீதமுள்ள பதினோரு வீரர்களை இந்தியா கண்டறிவது சிறப்பானதாக இருக்கும்.

இதையும் படிங்க:ஜடேஜா செஞ்ச வேலைக்கு காரணமே தோனிதான்.. உண்மையை உடைக்கும் துஷார் தேஷ்பாண்டே

விராட் மற்றும் ரோஹித் சர்மா உடன் விக்கெட் கீப்பருக்கான இடம் மட்டுமே இருக்கிறது. எனவே அது எவ்வாறு செல்லும் என்பதை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளது என்று கூறியிருக்கிறார். இதன் மூலமாக ஹர்திக் பாண்டியாவை மறைமுகமாக கழட்டி விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles