பெயர் கூட தெரியல.. சம்பவம் பண்ணிட்டு போய்ட்டாங்க.. தோல்விக்கு பின் கில் பேட்டி

17வது ஐபிஎல் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 17வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

- Advertisement -

குஜராத் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மான்கில் மற்றும் சகா ஆகியோர் களமிறங்கினர். சகா பதினோரு ரன்களில் ஆட்டம் இழந்தாலும் அடுத்ததாக வில்லியம்சன் களமிறங்கினார்.

- Advertisement -

வில்லியம்சன் 26 ரன்கள் குவிக்க, அடுத்ததாக வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 19 பந்துகளில் ஆறு பவுண்டரி உட்பட 33 ரன்கள் குறித்தார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய கேப்டன் கில் 48 பந்துகளில் ஆறு பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் உட்பட 89 ரன்கள் குவித்தார். இதனால் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 74 ரன்களுக்குள்ளேயே முக்கிய நான்கு விகெட்டுகளை இழந்துவிட்டது. மேலும் கடைசி 5 ஓவர்களில் 62 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பஞ்சாப் அணியில் புதுமுக வீரர்கள் இருந்ததனால், குஜராத் அணி கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலைக்கு சென்றது.

இக்கட்டான சூழலில் விளையாடிய பஞ்சாப் அணியின் சசாங்க் சிங் மற்றும் அசுடோஸ் சர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணியை கடைசி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இந்த தோல்வியை எதிர்பாராத குஜராத் அணியின் கேப்டன் கில் கூறும் பொழுது
“நாங்கள் இந்த ஆட்டத்தில் முக்கியமான இரண்டு கேட்ச்களை தவற விட்டோம்.

- Advertisement -

டி20 போட்டி பொறுத்தவரையில் கேட்ச்களை தவறவிட்டால் போட்டியை வெல்ல முடியாது. புதிய பந்து இந்த ஆடுகளத்தில் ஏதோ செய்து விட்டது. நாங்கள் குறைவான ரன்களை எடுத்தோம் என்று கூற முடியாது. 15 வது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். அதன் பிறகு தவறவிடப்பட்ட கேட்ச் வாய்ப்புதான் போட்டியை மாற்றியது. கடந்த போட்டியில் நல்கண்டே சிறப்பாக பந்து வீசியதால் இந்த போட்டியில் அவருக்கு கடைசி ஓவரை வீச கொடுத்தோம்.

இதையும் படிங்க:ஆர்சிபி ஃபேன்ஸ் ரொம்ப லாயல்னு சொன்னாங்க.. ஆனா என்கிட்ட இப்படித்தான் நடந்துக்கிட்டாங்க.. மயங்க் யாதவ் ஓபன் டாக்

பெயர் தெரியாத வீரர்கள் கூட ஐபிஎல் போட்டியை வெல்ல வைப்பது தான் அழகு. இனி அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற கடினமாக உழைப்போம்” என்று கூறி இருக்கிறார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles