தற்போதைய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகமாக பேசப்படக் கூடிய ஒரே நபர் மயங்க் யாதவ். தனது அதிவேக பந்துவீச்சின் மூலம் அனைவரையும் அனைத்து கிரிக்கெட் வல்லுனர்களின் கவனத்தையும் ஈர்த்தவராக இருக்கிறார். மேலும் இந்த அதிவேக பந்துவீச்சாளர் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தனக்கு நடந்த அனுபவத்தை சுவாரசியமாக பகிர்ந்திருக்கிறார்.
டெல்லியை சேர்ந்த இந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் லக்னோ அணிக்கு வருவதற்கு முன்பாகவே டெல்லி மற்றும் சென்னை அணியின் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு பந்து வீசி இருக்கிறார். எனவே இவரை இரு அணிகளில் ஏதாவது ஒரு அணி கண்டிப்பாக ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், இரு அணிகளும் எடுக்காததால் ஏமாற்றத்தில் இருந்து இவரை கடைசி நேரத்தில் நான் கௌதம் கம்பீர் அப்போது ஆலோசகராக இருந்தபோது லக்னோ அணி இவரது அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு தூக்கியது.
கடந்த சீசனிலேயே அனைவரது கவனத்தையும் பெற்றிருக்க வேண்டியவர், காயம் காரணமாக அந்த சீசனில் ஒரு போட்டியில் கூட இவரால் விளையாட முடியவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக களம் இறங்கினார்.
சாதாரணமாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் 150 கிலோமீட்டர் வேகத்தில் எப்போதாவது ஒரு ஒரு தடவை வீசுவார். ஆனால் இவரது பந்துவீச்சின் குறைந்த வேகம் 149 கிலோ மீட்டர் முதல் அதிகபட்ச வேகம் 156 கிலோ மீட்டர் வரை இருந்திருக்கிறது. மேலும் வேகமாக வீசியது மட்டும் இல்லாமல் தனது பந்து வீச்சில் துல்லியத்தையும், ரன்களை விட்டுக் கொடுக்காத நுணுக்கமும் கொண்டுள்ளதால் இவர் இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக அறிமுகமான போட்டியில் 27 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்த நிலையில், பெங்களூர் அணிக்கு எதிராக வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை அள்ளி இருந்தார். பந்து வீசி முடித்த பின்னர் பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த போது பெங்களூர் அணியின் ரசிகர்கள் தனக்கு அளித்த ஆதரவை கண்டு பெருமிதம் கொண்டார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். பெங்களூர் அணிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் மற்றும் விசுவாசமான ரசிகர்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். நான் பந்து வீசி முடித்துவிட்டு பௌண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்தபோது எல்லோரும் என்னை உற்சாகப்படுத்தினர். அதனால் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் அது. எல்லோரும் என்னை ஆதரித்தது உற்சாகமாக இருந்தது” என்று லக்னோ அணியின் சமூக வலைதளத்தில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க:கோலியை மீண்டும் கேப்டனா ஆக்குங்க.. சிஎஸ்கே வீரர் எங்களுக்கு வேணாம்.. சர்ச்சையை கிளப்பிய ஆர்சிபி ரசிகர்கள்.. காரணம் என்ன.?
அவரது இந்த கருத்து தற்போது ரசிகர்களை உற்சாகமாக்கி இருக்கிறது. பெங்களூர் அணியின் ரசிகர்கள் விசுவாசமானவர்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் பதினாறு வருடங்கள் ஆகியும் இன்னமும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணியின் மீது எந்த ஒரு கவலையும் கொள்ளாமல், இன்னும் தங்களது ஆதரவை தெரிவித்து வருவதே இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

