வீடியோ: கீழ விழுந்தாலும் பரவால்ல.. எழுந்து நின்று கைதட்டும் மனசு இருக்கே அந்த மனசுதான்.. ரசலை பாராட்டும் ரசிகர்கள்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் சரணடைந்தது. இப்போட்டியின் இடையில் ஒரு சுவாரசியமான சம்பவம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

டெல்லியின் சொந்த மைதானமான விசாகப்பட்டினம் டாக்டர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்கம் முதலே டெல்லி அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரேன் 39 பந்துகள் 85 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியின் ஸ்கோர் உயர முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அதற்குப் பின்னர் களம் இறங்கிய அங்கிஷ் ரகுவன்சி தனது முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டு 27 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் 41 ரன்களும், ரிங்கு சிங் 8 பந்துகளில் 26 ரன்களும் குவித்து கொல்கத்தா அணியின் ஸ்கோர் உயர உதவியினர். இதனால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் என்ற மெகா இலக்கை நிர்ணயித்தது.

- Advertisement -

பின்னர் கடின இலக்கை எதிர்கொண்ட டில்லி அணியினர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தால் விரைவிலேயே விக்கட்டுகளை இழந்தனர். இதில் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 25 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என்று 55 ரன்கள் விலாசி ஆறுதல் அளித்தார்.

மற்றொரு பேட்ஸ்மேன் ஸ்டெப்ஸ் 32 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் என்று 52 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டெல்லி அணி 17.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது. இப்போட்டியின் நடுவே ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆட்டத்தின் 19 ஆவது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார்.

- Advertisement -

அப்போது அவர் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் ரசல், அவரது அற்புதமான யார்க்கரை சமாளிக்க முடியாமல், போல்ட் ஆகி கீழே விழுந்தார். இருப்பினும் தான் ஆட்டமிழந்ததை உணர்ந்த ரசல் எழுந்து நின்று இசாந்த் சர்மாவின் பந்துவீச்சை கைதட்டியவாறு களத்தை விட்டு வெளியேறினார். தன் கீழே விழுந்தாலும் எதிரணியினரின் பந்துவீச்சை பாராட்டிய ரசலை தற்போது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:சிஎஸ்கே இல்லை.. கப் அடிக்க இந்த ரெண்டு டீம்க்கு அதிக வாய்ப்பு இருக்கு.. சொல்கிறார் முன்னாள் தென்ஆப்பிரிக்க வீரர்

இதன் மூலம் கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் கம்பீரமாக இருக்கிறது. அதிக ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வி அடைந்ததால் இப்போது நெட்ரன் ரேட்டில் டெல்லி அணி பரிதாபமான நிலையில் உள்ளது. எனவே அடுத்து வரும் போட்டிகளில் டெல்லி அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles