சுனில் நரேனுக்கு நாங்கள் செய்த தவறு.. அதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை.. தோல்வி குறித்து கூறும் ரிஷப் பண்ட்

தில்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி மூன்று வெற்றிகளை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

- Advertisement -

சுனில் நரேன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரிசப் பண்ட் அவுட் குறித்து அப்பில் கேட்காதது டெல்லி அணிக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது. விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. எனவே முதலில் பேட்டிங் செய்து கொல்கத்தா அணி 272 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக சுனில் நரேன் 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்ததே கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதற்கு முன்னர் அவர் குறைவான ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோதே, இஷாந்த் சர்மா பந்துவீச்சில் சுனில் நரேன் பேட்டில் பட்டு அதனை ரிசப் பண்ட் கேட்ச் பிடித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் டிரஸ் ரிஷப் பண்ட் பேட்டில் படவில்லை என்று நினைக்க, அதற்குள் டெல்லி அணியினர் கலந்து ஆலோசித்து ரிவ்யூ எடுக்கலாம் என்ற நிலையில் ரிஷப் பண்ட் ரிவ்யூ கேட்டபோது அம்பையர் நேரம் முடிந்து விட்டது ஏற்கப்படாது என்று கூறிவிட்டார். அதே நேரத்தில் மைதானத்தில் இருந்த திரையிலும் தொழில் நுட்பக் காரணமாக பிரச்சனை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இது டெல்லி அணிக்கே கடைசியில் பாதகமாக முடிந்திருக்கிறது. அதற்குப் பிறகு பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் 25 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 55 ரன்கள் குவித்திருந்தார். ஸ்டெப்ஸ் 32 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் நான்கு சிக்ஸர்கள் என 54 ரன்கள் குவித்து இருந்தார். எனவே தோல்வி குறித்து கூறிய ரிசப் பண்ட்

- Advertisement -

“இன்று எங்களுக்கு ஒரு கடினமான நாளாக அமைந்துவிட்டது. எங்கள் பந்துவீச்சாளர்கள் எல்லா இடத்திலும் முடிந்தவரை சிறப்பாக வீச முயற்சித்தனர். மைதானத்தில் எழுந்த அதிக சத்தத்தினால் சுனில் நரைன் பேட்டில் பட்டது சரியாக கேட்கவில்லை. மேலும் மைதானத்தில் இருந்த டைமரும் சரியாக வேலை செய்யவில்லை. ஸ்கிரீனில் உள்ள டைமரும் என்ன டைம் என்று சரியாக தெரியவில்லை.

இதையும் படிங்க :அவர் மீது அழுத்தம் கொடுக்காதீர்கள்.. அந்த பையன ஜாலியா இருக்க விடுங்க.. பிரட்லீ ஓபன் டாக்

நமது கைகளில் இருக்கும் விஷயத்தை மட்டும் தான் கட்டுப்படுத்த முடியும் இதையெல்லாம் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இது போன்ற பெரிய இலக்கை துரத்தும் பொழுது ஆல் அவுட் ஆவதே நல்லது என்று நினைக்கிறேன். எங்கள் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் அக்சர் பட்டேலுக்கு ஒரு ஓவருடன் நிறுத்தினேன். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஒரு தனி மனிதராக சிந்தித்து தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டும். இப்போது எனது உடல் தகுதி நன்றாக இருக்கிறது. எனவே அடுத்த போட்டியில் மீண்டு வர முயற்சிப்போம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles