அவர் மீது அழுத்தம் கொடுக்காதீர்கள்.. அந்த பையன ஜாலியா இருக்க விடுங்க.. பிரட்லீ ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாகத் தற்போது கருதப்படுபவர் டெல்லி அணியைச் சேர்ந்த 21 வயதே ஆன மயங்க் யாதவ்.

- Advertisement -

காரணம் அவர் ஐபிஎல்லில் இரண்டு போட்டிகளில் களம் இறங்கி செய்த சிறப்பான சம்பவங்கள். 2023ஆம் ஆண்டிலேயே களமிறங்க வேண்டிய இவர் காயம் காரணமாக அந்த ஒரு சீசனை தவற விட்டார். அதற்குப் பிறகு தற்போதைய சீசனில் முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக களம் இறங்கினார்.

- Advertisement -

களம் இறங்கிய நாள் முதல் தற்போது அனைவரின் பார்வையும் இவர் மீது மட்டும்தான் இருக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிராக நான்கு ஓவர்கள் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள். அதற்குப் பிறகு பெங்களூர் அணிக்கு எதிராக களமிறங்கி நான்கு ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள்.

- Advertisement -

இரண்டு போட்டியில் ஆறு விக்கெட்டுகளை எடுத்தது மட்டும் இல்லாமல், வேகப்பந்து வீச்சில் 150 கிலோ மீட்டருக்கு மேல் வேகத்தில் துல்லியமான லைன் அண்ட் லென்த்தால் எதிரணி வீரர்களை திணறடித்துக் கொண்டிருக்கிறார் இந்த இந்திய இளம் வீரர். எனவே இவர் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்காண இந்திய அணியில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அனைவரின் பார்வையும் தற்போது இவர் மீது மட்டுமே இருக்கும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வேகபந்து ஜாம்பவான் ஆன பிரெட்லீ அவர் மீது எந்த அழுத்தத்தையும் திணிக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார். பிரெட்லீ இது குறித்து கருத்து கூறும் பொழுது
“முதலில் நான் அவர் மீது எந்த அழுத்தத்தையும் திணிக்க விரும்பவில்லை.

- Advertisement -

என்றால் இந்தியாவை பிரதிநிதிப்படுத்தும் வாய்ப்பை பற்றி நாம் பேசினால் அது அந்த 21 வயது பையன் மீது அழுத்தத்தை அதிகரிக்க கூடும். ஆனால் அவரது பந்து வீச்சினால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.அவரது சிறந்த வேகம், நல்ல அதிரடி, முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் இரண்டாவது போட்டியில் மூன்று விக்கெட்டுகள் பெற்றார். எனவே அடுத்த சில மாதங்களில் அவர் எப்படி முன்னேறுகிறார் என்பதை நான் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:பாண்டியாவும் நம்மை போன்ற ஒரு மனிதர் தான்.. அவர் இரவில் நிம்மதியாக தூங்க வேண்டாமா?. ஆதரவு குரல் கொடுக்கும் ரவி சாஸ்திரி

தற்போது லக்னோ அணிக்காக விளையாடி வரும் இவர், பெங்களூர் அணிக்காக இவர் விளையாடிய பொழுது இவர் வீசப்பட்ட ஒரு பந்தின் வேகம் 156.7 கிலோமீட்டர் வேகத்தில் அமைந்திருக்கிறது. இது ஐபிஎல் வரலாற்றில் நான்காவது அதிவேகமாக வீசப்பட்ட பந்தாக பார்க்கப்படுகிறது. முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஷான்டைட்( 157.7), இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியை சேர்ந்த லாக்கி பெர்குசன்(157.3), மற்றும் மூன்றாவது இடத்தில் இந்திய அணியைச் சேர்ந்த உம்ரான் மாலிக்(157) ஆகியோர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles