ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது. லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தனது வேகத்தின் ரகசியம் குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீ காக் அபாரமாக விளையாடி 81 ரன்கள் குவித்தார். பின்னர் லக்னோ அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய பூரான் அவரது பங்குக்கு 21 பந்துகளில் 40 ரன்கள் குவித்து லக்னோ அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். இதில் 5 சிக்சர்கள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் அதிரடியான ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது.
சின்னச்சாமி மைதானம் வழக்கத்தை விட பந்துவீச்சுக்கு சற்று சாதகமாக மாறிய நிலையில், ஆர்சிபி அணியின் பந்து வீச்சாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள தவறினர். குறிப்பாக பூரானுக்கு 15 ரன்கள் முதல் 20 ரன்கள் வரை புல்டாஸ் பந்துகளை வீசி சிக்சர்களாக கொடுத்தனர். பின்னர் 182 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு பேட்டிங்கும் கை கொடுக்கவில்லை. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 22 ரன்களில் வெளியேற, அதன் பிறகு ஆட்டம் தலைகீழாக மாறியது.
கேப்டன் டூ பிளஸ்சிஸ்க்கு இந்த முறையும் படாமல் 19 ரன்களில் நடையை கட்டினார். அதற்குப் பிறகு ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து யாதவை உள்ளே கொண்டு வந்தார் கே எல் ராகுல். அவரது ஓவரில் இரண்டாவது பந்தை சந்தித்த மேக்ஸ்வெல் அவரது அபார வேகத்தில் எதிரடி அடிக்க நினைத்து பூரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் 9 ரன்களில் யாதவ் பந்துவீச்சிலேயே போல்டாகி வெளியேறினார். இப்படி முக்கிய பேட்ஸ்மின்களை வெளியேற்றிய யாதவ் ஆட்டம் லக்னோ பக்கம் திரும்ப முக்கிய காரணமாக அமைந்தார்.
இறுதிக்கட்ட பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களை குவிக்க பெங்களூர் அணி 153 ரன்களில் அனைத்து விக்கட்களையும் பறிகொடுத்தது. லக்னோ அணிக்காக சிறப்பாக பந்து வீசி ஆட்டநாயகன் விருது பெற்ற மயங்க் யாதவ் அவர் பந்துகளை வேகமாக வீசுவதற்காக மேற்கொள்ளும் பழக்க வழக்கங்கள் குறித்து கூறுகிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“இரண்டு போட்டிகளில் இரண்டு ஆட்டநாயகன் விருதுகள்.
இந்த இரண்டு போட்டியிலும் நாங்கள் வெற்றி பெற்றதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்திய அணிக்காக விளையாடுவதே எனது இலக்கு. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. கேமரூன் விக்கெட் எடுத்ததை நான் மிகவும் மகிழ்ந்தேன். ஒரு பவுலருக்கு ஸ்டம்பை நோக்கி பந்து வீசுவது அவ்வளவு அற்புதமாக இருக்கும்.
நான் விரைவாக பந்து வீசுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. உணவு, தூக்கம், பயிற்சி எல்லாவற்றையும் சரியான முறையில் செய்து கொண்டிருக்கிறேன். மேலும் உணவு கட்டுப்பாட்டில் சரியான நடைமுறையை மேற்கொண்டு வருகிறேன். உணவு மற்றும் குளிர்ந்த நீர் குளியளில் அதிக கானம் செலுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

