ஆர்சிபி தெளிஞ்சு வர்றதுக்குள்ள நாங்க முடிச்சிட்டோம்.. பாவம் இந்த பையன் காயத்துனால ரொம்ப சிரமப்பட்டாரு.. கேஎல் ராகுல் பேட்டி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கிடையான ஐபிஎல் தொடரில் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் மயங்க் யாதவின் பந்துவீச்சு குறித்து சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன் படி களமிறங்கிய லக்னோ அணிக்கு டீ காக் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க, பின்னர் வந்த பூரன் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். பொறுமையாகவும், அதிரடியாக விளையாடிய டீ காக் 56 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 81 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவரின் அதிரடியால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 182 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு நான்கு ஓவர்களில் 40 ரன்கள் குவித்த இந்த தொடக்க ஜோடி விராட் கோலியை தனது முதல் விக்கட்டாக பறிகொடுத்தது. இதன் பிறகு கேப்டன் டூப்லெஸ்சிஸ் வெளியேற, அதன் பிறகு லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவியின் அபார ஸ்பெல்லினால் பெங்களூர் அணி பேட்ஸ்மேன்கள் விரைவிலேயே ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

கடைசி கட்ட பேட்ஸ்மேன் லோம் ரோவர் மட்டும் 13 பந்துகளில் அதிரடியாக விளையாடி மூன்று பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என்று 33 ரன்கள் விளாசினார். அதற்கு அடுத்து பட்டிதார் 29 ரன்கள் குவித்தார். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 19.4 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் கூறும்பொழுது
“ஒட்டுமொத்தமாக இது ஒரு அற்புதமான போட்டி. ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல உதவியாக இருந்தது. எங்கள் அணியின் டி காக் மிக அபாரமாக விளையாடினார். எதிரணிக்கு எங்கள் திட்டம் என்ன என்பதை அறியும் நேரத்தில், நாங்கள் ஆட்டத்தில் இருந்து விலகி 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக பெற்று விட்டோம்.

- Advertisement -

சின்னசாமி மைதானத்தை பொருத்தவரை யார்க்கர் பந்துகளுக்கு விரைவிலேயே செல்லக்கூடாது. ஒரு ஓவரில் ஒரு பவுண்டரி அல்லது ஒரு சிக்சர் சென்றால் விரைவிலேயே உங்கள் மீது அழுத்தம் ஏற்படும். ஆனால் ஆடுகளம் உங்களுக்கு உதவும் என்று நம்ப வேண்டும். மயங்க் யாதவ் வீசிய ஒரு பந்து என்னை கடினமாக தாக்கியது. இரண்டு ஆட்டங்களாக அவரது பந்துவீச்சை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். டக் அவுட்டில் இரண்டு சீசன்களுக்காக அமைதியாக காத்திருந்தார். காயம் காரணமாக கடந்தாண்டு அவரால் விளையாட முடியவில்லை. இதற்காக மும்பையில் அவர் பிசியோக்களுடன் கடுமையாக உழைத்து வருகிறார்.

இதையும் படிங்க:எப்பா என்ன வேகம்.. ராஜதானி எக்ஸ்பிரஸ் வேகத்தில் சரிந்த ஆர்சிபி.. டி காக் அபார ஆட்டம்

155 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதே அவர் தெளிவாக உணர்ந்து இருக்கிறார். மேலும் சிறு வயதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் தனது உடலை பராமரிப்பதில் மிகவும் அக்கறையாக இருக்கிறார். நல்ல சுபாவம் கொண்ட அற்புதமான மனிதர். நான் ஸ்டெப்புகளுக்கு பின்னால் நின்று அவரது பந்துவீச்சை பார்க்க ஆசைப்படுகிறேன் என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles