ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 15வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும் மோதிய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் டீ காக் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பாக தொடங்கிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில் தங்களது முதல் விக்கெட் பறிகொடுத்தது. கேஎல் ராகுல் 2 சிக்சர்களை அடித்த நிலையில் 20 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அதன் பிறகு படிக்கல் ஆறு ரன்களில் வெளியேறினாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய பூரன் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். இவருக்கு தகுந்தார் போலவே ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் பந்துகளை புல்டாஸ் ஆக வீசி அதற்கு தகுந்த விலையை வாங்கிக் கொண்டனர். ஐந்து சிக்சர்களை விளாசிய இவர் 40 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சிறப்பாக விளையாடிய டிகாக் 56 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் குவித்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. 152 ரன்கள் குறித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி விராட் கோலி 22 ரன்களிலும் டு ப்ளஸ்சிஸ் 19 ரன்களிலும் வெளியேறினர். அதற்குப் பிறகு வந்த பேட்ஸ்மேன்களை லக்னோ அணியின் இளம் புயல் வேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் வெளியேற்றியதால் இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சிறப்பாக பந்து வீசிய மயங்க் யாதவ் நான்கு ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை தூக்கினார். எனவே தோல்வி குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் டூ ப்ளஸ்சிஸ் கூறும் பொழுது
“நாங்கள் டீ காக் மற்றும் பூரான் ஆகியோருக்கு எதிராக விடப்பட்ட கேட்ச்கள் ஆட்டத்தின் சூழ்நிலையை மாற்றியது. டீ காக் 25 ரன்களில் இருந்த போதும், பூரன் தொடக்கத்தில் இருந்த போதும் இவர்களுக்கு எதிராக விடப்பட்ட கேட்ச்கள் மேலும் 60 ரன்களைக் கூடுதலாக கொடுப்பது போல் ஆகிவிட்டது.
ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் இது போன்ற தவறுகளை செய்தால் ஆட்டத்தினை வெல்ல முடியாது. எல்லா இளம் வேகப்பந்துவீச்சாளர்களையும் புதிதாக சந்திக்கும் பொழுது ஆட்டத்தில் சற்று தடுமாற்றம் இருப்பது இயல்பு. ஆனால் அதைத் தாண்டி அவரது பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அவரது லைன் அண்ட் லென்த் துல்லியம் மிகவும் ஈர்க்கப்படக்கூடிய திறன்கள்.தொடக்கத்தில் நாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை. மேக்ஸ்வெல் அபாரமாக பந்து வீசினார். அதே நேரத்தில் இறுதி கட்டத்தில் எங்களது ஓவர்கள் அற்புதமாக இருந்தது.
இதையும் படிங்க:ஆர்சிபி தெளிஞ்சு வர்றதுக்குள்ள நாங்க முடிச்சிட்டோம்.. பாவம் இந்த பையன் காயத்துனால ரொம்ப சிரமப்பட்டாரு.. கேஎல் ராகுல் பேட்டி
நாங்கள் வெற்றி பெற அணியில் இருக்கும் சிறப்பான வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். படித்தார் மற்றும் ராவத் ஆகியோர் சிறப்பாக விளையாடினார். அடுத்த போட்டியில் மீண்டு வர முயற்சிப்போம்” என்று கூறி இருக்கிறார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் லக்னோ அணி புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் பெங்களூர் அணி ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

