ஐபிஎல் களத்தில் இன்று சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும் ஒரே டாபிக் என்றால் அது மயங்க் யாதவ் மட்டும்தான். அப்படிப்பட்ட ஒரு திறமையான வேகப்பந்துவீச்சாளரை சிஎஸ்கே அணி தவறவிட்ட செய்தியறிந்து ரசிகர்கள் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் குவித்தது. இதனை எடுத்து இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி கிட்டத்தட்ட 10 ஓவர்களில் 100 ரன்களுக்கு பக்கம் வந்துவிட்டது. நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த பஞ்சாப் அணியை ஒரு இளம் புயல் வேகப்பந்துவீச்சாளர் பஞ்சாப் அணியின் முதல் விக்கெட் ஆன பேர்ஸ்ட்டோவைத் தூக்கினார்.
அப்போதே இந்தியாவில் இப்படி ஒரு வேகப்பந்துவீச்சாளரா? என்று அனைவரின் பார்வையும் இவர் மேல் விழுந்தது. கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கூட சிறிது நேரம் இவரைப் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தனர். அந்த சூடு அடங்கி முடிவதற்குள் அடுத்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி தான் இந்திய அணிக்குள் வரத் தயாராகி இருப்பதாக அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.
இவரது வேகத்தில் அவ்வளவு துல்லியம், லைன் அண்ட் லெந்தில் பக்காவாக பந்து வீசும் திறன் இருக்கிறது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாராட்டி இருக்கின்றனர். மூன்று முக்கிய விக்கெட்டுகளை எடுத்ததோடு லக்னோ அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இவர் கடந்தாண்டிலேயே லக்னோ அணிக்காக அறிமுகமாக வேண்டி இருந்தது. அப்போது நடந்த பயிற்சி முகாமில் இவர் காயம் அடைந்ததால் இவரால் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் இந்த சீசனில் இவரை தற்போது களமிறக்கி இருக்கிறது.
2022ஆம் ஆண்டு மயங்க் யாதவை அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு அணியில் எடுத்தது லக்னோ அணி. ஆனால் ஐபிஎல் போட்டிக்கு முன்பாக சென்னை, டெல்லி நடத்திய பயிற்சி முகாம்களில் மயங்க் யாதவ் கலந்து கொண்டு பந்து வீசி இருக்கிறார். அப்போது இவரின் மீது இரு அணிகளும் நல்ல அபிப்பிராயத்தை கொண்டிருந்தாலும் ஏலத்தின் போது எடுக்க முனைப்பு காட்ட வில்லை. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி லக்னோ அணி தனக்கு சாதகமாக்கி கொண்டது. இவரை சிஎஸ்கே அணி மிஸ் செய்து விட்டதே என்ற சென்னை ரசிகர்கள் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அதற்கான விலையை நேற்று பஞ்சாப் போட்டியின் மூலம் தெரியப்படுத்தி விட்டார் இந்த இளம் அதிவேக பந்துவீச்சாளர். முதல் போட்டியிலேயே தன்னை நிரூபித்து விட்ட இவர், இனி வரும் எஞ்சிய போட்டிகளில் இவரது பந்துவீச்சைக்கான ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் முன்னால் கிரிக்கெட் வேகப்பந்து ஜாம்பவான்களான பிரட்லி மற்றும் ஸ்டைன் ஆகியோர் இவரது பந்துவீச்சை கண்டு பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கண்டிப்பா சொல்றேன்.. ஆக்ரோஷமா விளையாட போறோம்.. சிஎஸ்கேவ சும்மா விட மாட்டோம்.. பயிற்சியாளர் பாண்டிங் அதிரடி
இவர்களில் டேல் ஸ்டெயின்தான் மயங்க் யாதவின் அடையாளம் என்று அவரே கூறியிருக்கிறார். மேலும் இவரை போன்றே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. அவரது வேகம் நன்றாக இருப்பினும் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் கோட்டை விடுவதால் இந்திய அணி அதற்குப் பின்னர் மாலிக்கை எடுக்கவில்லை. ஆனால் மயங்க் யாதவ் வேகமாகவும் அதே நேரத்தில் சிக்கனமாகவும் ரன்களை வழங்குவதால் இவர் இந்திய அணியில் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

