ரஸல் இது செட் ஆகாதுன்னு தெரிஞ்சு திட்டத்தை மாத்துனாரு.. சுனில் நரேன் பத்தி கொஞ்சம் யோசிச்சோம் ஆனா.. வெற்றி குறித்து கூறும் கேகேஆர் கேப்டன்

17-வது ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 10வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆர்சிபி அணியின் கோட்டையான பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். கேமரூன் கிரீன் 38 ரன்களும், மேக்ஸ்வெல் 28 ரன்களும் குவித்தனர். தினேஷ் கார்த்திக் அதிரடியாக இறுதி கட்டத்தில் விளையாடி 8 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணித்தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ரஸல் நான்கு ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் அள்ளினார்.

- Advertisement -

பின்னர் 183 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. சுனில் நரேன் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் கொல்கத்தா அணியின் இன்னிங்சைத் தொடங்க இவர்கள் இருவரும் முதல் ஆறு ஓவர்களிலேயே கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சுழற் பந்துவீச்சினை அசால்டாக எதிர்கொண்ட சுனில் நரேன் 22 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசி 47 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர் சால்ட் 20 பந்துகளில் 30 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் பெங்களூர் அணியின் பந்துவீச்சினை பதம் பார்த்தார். 30 பந்துகளை எதிர்கொண்ட அவர் மூன்று பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் விளாசி 50 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 39 ரன்கள் விளாசி கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இவரின் அதிரடியால் 17 ஓவர்களிலேயே கொல்கத்தா அணி வெற்றி இலக்கை அடைந்தது. இதனால் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில்
“மைதானத்திற்கு வந்து இரண்டு முறையிலான பயிற்சிகளை மேற்கொண்டோம். முதல் ஆட்டத்தை வெற்றி பெற்று நல்ல மனநிலையில் இந்த போட்டியை எதிர்கொண்டோம்.

- Advertisement -

இறங்கியது முதலே அதிரடியாக விளையாடியது வெற்றி பெற எளிதாக இருந்தது. எங்கள் அணியின் ரசல் ஆடுகளம் விக்கெட் வீழ்த்த ஒத்துழைக்காது என்பதை நன்கு புரிந்து கொண்டு மெதுவான பந்துகளை வீச ஆரம்பித்தார். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அதை களத்திலேயே அவர் செயல்படுத்திய விதம் பார்க்க கண்களுக்கு குளிர்ச்சியாக அமைந்தது. தகவல்கள் பரிமாற்றம் எங்கள் அணியில் அற்புதமாக அமைந்தது. இன்று சுனில் நரினை வைத்து பேட்டிங்கை தொடங்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தோம்.

இதயம் படிக்கலாமே:நாங்க ஒன்னு நினைச்சு வர்றோம்.. ஆனா அது வேற மாதிரி நடக்குது.. இந்த விஷயம் கோலிக்கே கஷ்டமா இருந்துச்சு..தோல்வி குறித்து கூறும் டூ பிளஸ்சிஸ்

ஆனால் அவர் வேலையை நன்கு உணர்ந்து இன்று அபாரமாக செயல்பட்டார். ஒரு முனையில் இருந்து பேட்டிங் பார்க்க நன்றாக இருந்தது. இந்த வெற்றி எங்கள் தொடரின் ஆரம்பம். இதனை ஒருவருக்கொருவர் அனுபவித்து விளையாட வேண்டும் அதுதான் இப்போதைக்கு எங்களின் ஒரே திட்டம்” என்று கூறியிருக்கிறார். இரண்டு போட்டியில் தோல்வியை தழுவிய பெங்களூர் அணி தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles