நாங்க ஒன்னு நினைச்சு வர்றோம்.. ஆனா அது வேற மாதிரி நடக்குது.. இந்த விஷயம் கோலிக்கே கஷ்டமா இருந்துச்சு..தோல்வி குறித்து கூறும் டூ பிளஸ்சிஸ்

ஐபிஎல் லீக் போட்டியில் நடைபெற்ற பத்தாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

- Advertisement -

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணியின் இன்னிங்சை தொடக்க ஆட்டக்காரர்கள் பாப் டுப்ளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இரண்டு ஆட்டங்களாக சொதப்பிய கேப்டன் டூப்ளிசஸ் மூன்றாவது ஆட்டத்திலும் சொப்பினார். விராட் கோலி ஒரு முனையில் நங்கூரம் போல நிலைத்து நின்று விளையாடிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

கேப்டன் டூப்ளசிஸ் எட்டு ரன்களில் வெளியேற அவரைத் தொடர்ந்து வந்த கேமரூன் கிரீன் அதிரயாக விளையாடி 21 பந்துகளில் நான்கு பவுண்டரி, 2 சிக்சர்கள் என்று 33 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் வந்த மேக்ஸ்வெல் 19 பந்துகள் 28 ரன்கள் குவிக்க, விராட் கோலி ஒரு முனையில் நிதானமாகவும், அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

கொல்கத்தா அணி பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு ஸ்லோயர் ஒன் மற்றும் கட்டர் பந்துகளை வீசியதால் பெங்களூர் அணி ரன்கள் குவிக்க சிரமப்பட்டது. இதனால் இறுதிக்கட்டத்தில் பெங்களூரு அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. 20 ஓவர்களில் பெங்களூர் அணி 182 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா அணி 17 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. அபாரமாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து கொல்கத்தாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். தோல்வி குறித்து கேப்டன் டு பிளஸ்சிஸ் கூறுகையில்

“முதலில் நாங்கள் பந்து வீசிய போதே விக்கெட் மெதுவாக இருக்கும் என்று நினைத்தோம். கேகேஆர் அணி பந்துவீச்சாளர்கள் அதிகமாக ஸ்லோயர் ஒன் பந்துகளை வீசி எங்கள் பேட்ஸ்மேன்களை சிரமப்படுத்தினார்கள். இதற்குத் தகுந்தவாறு பனிப்பொழிவும் அதிகமாக வந்தது. முதல் இன்னிங்ஸ்சில் ஆடுகளம் கடினமாக இருந்ததால் விராட் கோலி பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக உணர்ந்தார்.

- Advertisement -

பவர் பிளே ஓவர்களில் பெரும்பாலும் திட்டமிட்டு களமிறங்குவோம். சிலவற்றை தான் பவர் பிளேவில் மாற்ற முடியும். ஆனால் பவர் பிளே முடிவதற்குள் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆட்டத்தை மாற்றி விட்டார்கள். அவர்கள் இருவரின் பேட்டிங் அபாரமாக இருந்தது. தரமான சாட்கள் ஆடியதோடு நேர்த்தியாகவும் விளையாடினார்கள். அவர்கள் இருவரும் எங்கள் பந்துவீச்சாளர்களையும் சோதித்து பார்த்து விட்டனர். நரைன் இருக்கும்போது ஸ்பின்னர்களை வைத்து சோதனை செய்யக் கூடாது. முதல் ஆறு ஓவர்களிலேயே அனைத்தும் முடிந்து விட்டது.

இதையும் படிக்கலாமே:9 வருட சோகம்.. பரிதாபமான பெங்களூர் அணி.. அடித்து நொறுக்கிய கொல்கத்தா.. சோகத்தில் ஆர்சிபி ரசிகர்கள்

வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தபோது லெக் ஸ்பின்னரிடம் பந்தை கொடுத்தால் அவரால் எளிதாக கையாள முடியும்.அதனால் இரண்டு திசைகளிலும் பந்து வீசக்கூடிய பந்துவீச்சாளர் தேவைப்பட்டனர்.ஆனால் அது ஆர்சிபி அணியில் இல்லை. முதலில் நாங்கள் கரன்சர்மாவை இம்பாக்ட் பிளேயராக கொண்டுவர நினைத்தோம்.

கொல்கத்தா அணியில் ரசல் ஸ்லோயர் கட்டர்கள் வீசிதை பார்த்து வைசாக் விஜயகுமாரை உள்ளே கொண்டு வந்தோம். எதிர்பார்த்தது போலவே அவரது பந்து வீச்சுதான் சிறப்பாக அமைந்திருக்கிறது” என்று கூறினார். இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles