9 வருட சோகம்.. பரிதாபமான பெங்களூர் அணி.. அடித்து நொறுக்கிய கொல்கத்தா.. சோகத்தில் ஆர்சிபி ரசிகர்கள்

இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடர் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

- Advertisement -

இந்த நிலையில் டாசை இழந்த பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. பார்ம் இன்றி தவித்து வரும் பெங்களூர் அணியின் கேப்டன் டூப் பிளஸ்சிஸ் இந்த ஆட்டத்திலும் பேட்டிங்கில் தடுமாறினார். ஆறு பந்துகளில் எட்டு ரன்கள் குவித்த நிலையில் ஹர்ஷித் ரானா பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு வந்த கேமரூன் கிரீன் விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பெங்களூர் அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

- Advertisement -

21 பந்துகளில் 33 ரன்கள் குவித்த நிலையில் ஆல் ரவுண்டர் ரசலின் பந்துவீச்சில் கிரீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதற்குப் பிறகு ஆடுகளம் மெல்ல மெல்ல பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. இவரைத் தொடர்ந்து அதற்கு பின்னால் வந்த மேக்ஸ்வெல் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளையும் கொல்கத்தா அணியினர் தவறவிட, அதற்குப் பிறகும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மேக்ஸ்வெல் தவறினார்.

- Advertisement -

19 பந்துகளில் 28 ரன்கள் குவித்த நிலையில் சுழற் பந்துவீச்சாளர் நரைன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதற்குப் பின்னால் வந்த ரஜத் பட்டிதார் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் தலா மூன்று ரன்களில் வெளியேற, தடுமாறிய பெங்களூர் அணிக்கு தினேஷ் கார்த்திக் இறுதிக்கட்டத்தில் சிறப்பாய் விளையாடினார். எட்டு பந்துகளில் மூன்று சிக்சர்களை விளாசி 20 ரன்கள் குவித்தார். ஒரு முனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்ற விராட் கோலி இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி 59 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் நான்கு சிக்ஸர்களுடன் 83 ரன்கள் குவித்தார்.

இதனால் பெங்களூர் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. பின்னர் 183 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுனில் நரைன் மற்றும் சால்ட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் 6.3 ஓவர்களில் சேர்த்தனர். பெங்களூர் அணி விளையாடும் போது பந்துவீச்சுக்கு சாதகமாக தெரிந்த ஆடுகளம் கொல்கத்தா அணி விளையாடும் போது அப்படியே நேர்மாறாய் அமைந்தது.

- Advertisement -

அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 22 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னால் வந்த வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தார். பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் இரண்டு சிக்சர்கள் என 39 ரன்கள் குவிக்க கொல்கத்தா அணியின் வெற்றி உறுதியானது.

இதையும் படிக்கலாமே:கம்பீர் கோலி இடையே விரிசலா.?. அவர்களே வைத்த முற்றுப்புள்ளி.. ஷாக்கான ரசிகர்கள்.. வீடியோ

16.5 ஓவர்களிலேயே 186 ரன்கள் குவித்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் பெங்களூர் அணி கொல்கத்தா அணியை வீழ்த்தியதில்லை. 9 வருட சோகம் இன்னும் தொடர்கிறது. மூன்று போட்டிகளில் விளையாடிய பெங்களூர் அணி தற்போது இரண்டாவது தோல்வியை சந்தித்து இருக்கிறது. கொல்கத்தா அணி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது. பெங்களூர் அணி தோல்வி அடைந்ததை கண்டு ஆர்சிபி அணியினர் வருத்தத்தில் உள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles