சிஎஸ்கே கவனம்.. அவர் ரிட்டன் வராரு.. உங்கள அச்சுறுத்த போறதே இந்த அணிதான்..அஸ்வின் பரபரப்பு பேட்டி

ஐபிஎல்லைப் பொறுத்தவரை இரண்டு வெற்றிகரமான அணிகள் என்று கூறினால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ். இந்திய அணிக்கு பரம எதிரி எப்படி பாகிஸ்தானோ, அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பரம எதிரி என்றால் மும்பை இந்தியன்ஸ்.

- Advertisement -

இவ்விரு அணிகளுமே தலா ஐந்து முறை பட்டத்தை வென்று சரிசமமாக உள்ளன. இரு அணிகளும் களத்தில் எதிரிகளாக மாறியதற்குக் காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சினும் இருப்பதால்தான். மேலும் இந்த இரு அணிகளுக்கும் தரமான கேப்டன், நட்சத்திர வீரர்கள் என பெரிய பட்டாளமே இருப்பதால், இவ்விரு அணிகளும் வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுத் தராது.

- Advertisement -

களத்தில் முடிந்தளவு கடைசி வரை போராடும் போராட்ட குணம் கொண்டவர்களாகவே தென்படுவர். இவ்விரு அணிகளில் யார் தற்போது ஆறாவது பட்டத்தை வெல்லப் போவது யார் என்ற கேள்வியே தற்போது ரசிகர்கள் மனதில் எழுந்து வருகிறது. தற்போது மும்பை அணிக்கு ஹார்த்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவதால், அவரது தலைமையில் செயல்பட போகும் மும்பை அணி குறித்தும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இவ்விருணிகளுக்குமான உறவு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர சென்னை அணிக்கு மற்றொரு எதிரியாக இருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி என்பது பலர் அறியாத உண்மை. ஐபிஎல் 2010, 2011ஆம் ஆண்டு என இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த போது, அப்போது சென்னையை எதிர்கொண்ட கொல்கத்தா அணி ஹாரட்ரிக் வெற்றியை தகர்த்து கௌதம் கம்பீர் தலைமையில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

அதுமட்டுமல்லாமல் லீக் போட்டிகளில் சென்னை அணி கொல்கத்தா அணியை எதிர்கொண்டால், கேகேஆர் அணியின் கேப்டன் கௌதம் கம்பீர், வித்தியாசமான முறையில் பீல்டிங் செட்டப்பை அமைப்பார். மற்ற அணிகளை வீழ்த்துவதை காட்டிலும் சென்னை அணியை வீழ்த்தினால் கம்பீரின் மனதில் ஒரு புத்துணர்ச்சி வெளிப்படுவது தெளிவாகவே தெரியும். தற்போது எல்எஸ்ஜி அணியில் இருந்து கொல்கத்தா அணியின் ஆலோசகராக வந்திருக்கும் கௌதம் கம்பீர் சென்னை அணிக்கு எதிராக என்ன திட்டத்தை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. எனவே இது குறித்து சென்னை அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில்

- Advertisement -

“சிஎஸ்கே அணிக்கு மும்பை அணி பல ஆண்டுகள் எதிரிகளாக இருந்து இரு அணிகளும் சரிசமமாக ஐந்து கோப்பைகளை வென்றுள்ளனர். மும்பை அணி 2013ஆம் ஆண்டில்தான் முதல் கோப்பை வென்றது. அதற்குப் பிறகு ஐந்து முறை கோப்பையை வென்றார்கள். ஆனால் மும்பை அணிக்கு முன்னதாகவே 2012ஆம் ஆண்டு கோப்பையை வென்ற கொல்கத்தா அணி சென்னை அணியின் ஹாட்ரிக் வெற்றியைத் தகர்த்து சென்னையின் வீரநடைக்கு முட்டுக்கட்டை போட்டது.

சிஎஸ்கே அணிக்கு மற்றொரு முள்ளாக இருந்தது கேகேஆர் அணி தான். அந்த அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். எப்போதும் விட்டுத் தராத கௌதம் கம்பீரின் மன உறுதி எனக்கு மிகவும் பிடிக்கும். வேறு அணிகளில் இருந்து பார்த்தால் அவர் மீது கோபம் வரும். அணி சார்ந்து அவரைப் புரிந்து கொண்டால் அவரை மிகவும் பிடிக்கும். தற்போது எல்எஸ்ஜி அணியில் இருந்து கேகேஆர் அணிக்கு சரியான நேரத்திற்கு வந்திருக்கிறார். எனவே இந்த முறை அவர்களின் போராட்டம் சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles