சிஎஸ்கே இல்லை.. இந்த டீம் தான் சாம்பியன் ஆகணும்னு எனக்கு ரொம்ப ஆசை.. உத்தப்பா ஓப்பன் டாக்.. வருத்தத்தில் சென்னை ரசிகர்கள்

இந்தியன் பிரீமியர் லீ கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இதன் தொடக்கப் போட்டியை விறுவிறுப்பாக ஆரம்பிக்க ஐந்து முறை பட்டம் வென்ற நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணி ரசிகர்களின் இதயத்துடிப்பான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத இருக்கின்றன.

- Advertisement -

மார்ச் இறுதியில் இத்தொடர் தொடங்கி மே இறுதிவரை நடைபெறுகிறது. இதற்கான கலா விவாதம் தற்போதைய சூடு பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களும் ஐபிஎல் க்கு தயாராகி வருகின்றனர். 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் ஆனது இந்தியா மட்டுமின்றி உலக ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்ற தொடராக விளங்குகிறது.

- Advertisement -

இதன் முதல் தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்ற நிலையில் இரண்டாவது தொடர் சில காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று அங்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் துபாய்க்கு மாற்றப்பட்டது.

- Advertisement -

அங்கும் எதிர்பார்த்ததை போலவே ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்ற மற்றும் சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்கள் இத்தொடர்னை கண்டு களித்துள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் குறித்து பல கிரிக்கெட் நிபுணர்களும் விமர்சகர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ராபின் ராபின் உத்தப்பா ஐபிஎல் குறித்தும் இந்த ஐபிஎல் எந்த அணி சேம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பது குறித்தும் தனது கருத்தினை வெளிப்படையாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்

- Advertisement -

நான் கொல்கத்தா அணிக்காக விளையாடி இருக்கிறேன். கொல்கத்தா அணியிலிருந்து விலகிப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும் என் காதல் இன்னும் அந்தணியின் மீது அப்படியேதான் இருக்கிறது. எனவே கொல்கத்தா அணி மீண்டும் சேம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக இருக்கிறது என்று ராபின் உத்தப்பா கூறி இருக்கிறார்.

இருப்பினும் சென்னை அணிக்கு முன்னதாக கொல்கத்தா அணிக்காக விளையாடிய இறுதி கட்டங்களில் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணங்களாகவே அணியில் இருந்து விலகினார் என்ற ஒரு செய்தி அப்போது பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதற்குப் பிறகு சென்னை அணி தான் இவரை ஏலத்தில் எடுத்து நம்பிக்கை அளித்ததுடன் திரும்பவும் ஃபார்முக்கு வர உதவியது. எனவே உத்தப்பா கூடுதலாக சென்னை அணியின் பெயரையாவது சொல்லி இருக்க வேண்டும் என்று வருத்தத்தில் சென்னை ரசிகர்கள் உள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles