எழுதி வச்சுக்கோங்க.. இந்த முறை டி20 உலக கொப்பை ஜெயிக்கிறது இவங்க 2 பேரில் ஒருத்தர்.. கேசவ் மகராஜ் உறுதி

டி20 உலகக் கோப்பையானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து என மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.

- Advertisement -

இதில் மொத்தம் 55 போட்டிகள் என 9 மைதானங்களில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் உலகக்கோப்பையை நடத்தும் அமெரிக்க அணியும் பங்கேற்கிறது. இதில் ஆறு போட்டிகள் வெஸ்ட் இண்டீசிலும், மற்ற போட்டிகள் அமெரிக்காவிலும் நடைபெறுகின்றன. சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகின்றன.

- Advertisement -

ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் அமெரிக்க அணியும், கனடா அணியும் மோதுகின்றன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெரும் அணிகளாக கருதப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு அணிகளும் திறமையான வீரர்களைக் கொண்டு தங்கள் அணிகளை வலுப்படுத்தி வருகிறது.

- Advertisement -

இதில் டி20 உலக கோப்பையை வெல்ல இந்திய அணி அதிகம் முனைப்புக் காட்டி வருகிறது. ஏனென்றால் இந்த உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற இருப்பதாக தெரிகிறது. எனவே இவர்கள் இருவரையும் வெற்றிகரமாக வழியனுப்ப இந்திய அணி கடும் போட்டி கொடுக்கும்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் சுழற்பந்துவீச்சாளரான கேசவ் மகாராஜ் ஸ்போர்ட்ஸ் டாக்கிஸில் உலகக் கோப்பை குறித்து சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். 50 ஓவர் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி அரை இறுதியில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

எனவே இது குறித்து மகாராஜ் கருத்து தெரிவிக்கையில்
“ஒவ்வொரு முறையும் உலகக்கோப்பையில் விளையாட செல்லும் போது அங்கு நாங்கள் கோப்பையை வெல்லவே முயற்சிக்கிறோம். அதனை இம்முறை சரி செய்வோம் என்று நம்புகிறேன். இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் விளையாடினால் சிறப்பாக இருக்கும். இதில் விளையாடும் ஒரு அணியே நிச்சயம் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டுமென உள்ளூர் ரசிகர்களும் விரும்புகின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 தொடர் குறித்து கேட்கிறீர்கள். தென்னாப்பிரிக்கா டி20 தொடர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று தரமானதாக இருக்கும். இரண்டாவது ஆண்டிலேயே எங்கள் அணியின் முன்னேற்றம் சிறப்பாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது” என்று கூறியிருக்கிறார். இவர் தென்னாபிரிக்க டி20யில் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டனாக பதவி வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles