4464 நாட்களில் முதல் முறை.. 2வது டெஸ்ட் இந்திய அணியில் அபூர்வம்.. சோகத்தில் ரசிகர்கள்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்க உள்ளது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

- Advertisement -

இதில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடாத நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு விராட் கோலியின் இழப்பு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதில் நாளை தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சில நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களம் இறங்குகிறது. விராட் கோலி இல்லாத நிலையில் மேலும் அணியின் முக்கிய வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதனால் அனுபவம் குறைவான இந்திய அணியே இரண்டாவது போட்டியில் களமிறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் குறிப்பாக நாளை தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி 12 வருடங்கள் மற்றும் மூன்று மாதங்களில் சரியாக 4464 நாட்களில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, புஜாரா அல்லது ரகானே ஆகியோர் இல்லாமல் களம் இறங்கும் முதல் டெஸ்ட் போட்டி இது ஆகும்.

- Advertisement -

மேலும் இந்திய மண்ணில் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா விளையாடாத முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த காலகட்டத்தில் இந்திய அணி 119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்தியா மற்றும் அந்நிய மண்ணில் இவர்களில் ஒருவராவது விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் இல்லாமல் கடைசியாக விளையாடியது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியாகும்.

பின்னர் இரண்டாவது போட்டியில் விராட் கோலி இந்திய அணியில் இணைந்தார். கோலி மற்றும் ஜடேஜா அணியின் முக்கிய வீரர்களாக இருக்கும் நிலையில் தற்போது வலிமையான இங்கிலாந்து அணிக்கு எதிராக களம் இறங்குவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவே ஆகும். மேலும் முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

- Advertisement -

பந்து வீச்சில் வலிமை வாய்ந்த இந்திய அணி தற்போது பேட்டிங்கில் தடுமாறி வருகிறது. அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெறுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். முதல் போட்டியில் வெற்றி பெற்ற அதே உத்வேகத்தை இரண்டாவது போட்டியில் காண்பிக்கும் வகையில் இங்கிலாந்து அணி களம் இறங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles