இந்தியா vs தென்னாப்பிரிக்கா பாக்சிங் டே டெஸ்ட்.. தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பாரா? ராகுல் டிராவிட் பதில்!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் நடக்கும் டெஸ்ட் போட்டியை பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படும். இந்திய அணி நீண்ட நாட்களுக்கு பின் பாக்சிங் டெ டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது.

- Advertisement -

ஆசிய அணிகளில் இலங்கை அணி மட்டுமே தென்னாப்பிரிக்காவில் இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதனால் புதிய சாதனையை படைக்கும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதற்காக ஏற்கனவே இந்திய ஏ அணியுடன் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா ஆடுகளத்தில் பவுன்ஸ் அதிகமிருக்கும் என்பதால், இந்திய அணியின் பவுலிங் காம்ப்னேஷன் எப்படி இருக்கும் என்ற விவாதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசும் போது, இந்திய அணியின் பவுலிங் காம்பினேஷன் பற்றிய முடிவை போட்டி நடக்கும் நாளில் தான் எடுக்கவுள்ளோம்.

- Advertisement -

குறிப்பாக சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தின் ஆடுகளம் மற்றும் வானிலையை பார்க்க வேண்டியுள்ளது. இதன் இரண்டையும் கணக்கிட்டு தான் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் நேரத்திற்கு ஏற்றாற் போல் சில நேரங்களில் வானிலை மாறி வருகிறது. அதனால் டெஸ்ட் போட்டி நடக்கும் நாளில் அணியை முடிவு செய்வதே சரியாக இருக்கும்.

இந்திய அணியின் ஒவ்வொரு வீரரும் திறமையானவர்கள். அதேபோல் எந்த காம்பினேஷனில் வேண்டுமானாலும் இந்திய அணியால் களமிறங்க முடியும். 3 வேகப்பந்துவீச்சாளர்கள் +  2ஸ்பின்னர்கள் என்றும் காம்பினேஷன் அமைக்க முடியும். அதேபோல் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் + ஒரு ஸ்பின்னர் என்றும் காம்பினேஷன் அமைக்க முடியும். எல்லாவற்றையும் கணித்து போட்டி நாளில் முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வானிலை காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வினை எடுக்காமல், இந்திய அணி ஜடேஜாவை மட்டும் நம்பி களமிறங்கியது. அந்த போட்டியில் தோல்வியடைந்த பின், அஸ்வின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தவறாமல் எடுக்கப்பட்டு வருகிறார்.

ஆனால் தென்னாப்பிரிக்கா மண்ணில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், அவரின் அனுபவம் மூலமாக நிச்சயம் அசத்துவார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் அஸ்வினை எடுக்காமல் மீண்டும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தவறு செய்ய மாட்டார்கள் என்று பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles