கேப்டன் பொறுப்பை ஏற்க திரும்ப எனக்கு விருப்பமே இல்ல.. ஆனா அந்த ஒரு விஷயத்துனாலதான் ஒத்துக்கிட்டேன் – ரோஹித் ஷர்மா ஓபன் டாக்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரோஹித் சர்மா, அணியின் கேப்டன்சி மற்றும் தலைமைப் பொறுப்பு குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வரும் அவர், அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி மாற்றம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ரோஹித் சர்மாவின் எதிர்கால தலைமைப் பொறுப்பு குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் அவரது சமீபத்திய கருத்து கவனம் பெற்றுள்ளது.

- Advertisement -

இது குறித்து ரோஹித் சர்மா கூறும்போது, “மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்க நான் தற்போது தயாராக இல்லை. கடந்த காலங்களில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கியபோது, அணிக்கு சரியான வழிகாட்டுதலும் திசையும் தேவை என்பதை உணர்ந்தேன். அந்தப் பொறுப்பை என்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்றால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles