வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான பேட்டிங் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இளம் வயதிலேயே சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வரும் அவரது ஆட்டத்திறன் முன்னாள் வீரர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. குறிப்பாக பந்துகளை எதிர்கொள்ளும் விதமும், அபாரமான உடல் வலிமையுடன் சிக்ஸர்களை விளாசும் திறனும் கவனம் ஈர்த்துள்ளன.
சாதாரணமாக ஒரு பேட்ஸ்மேன் பெரிய ஷாட்களை அடிக்கும்போது கால்களை நகர்த்தி விளையாடுவார். ஆனால் வைபவ் நின்ற இடத்திலிருந்தே சிக்ஸர்களை விளாசுவது தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் அவரது பேட்டிங் திறன் மற்றும் எதிர்கால சாதனைகள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இது குறித்து தன்வீர் அகமது கூறும்போது, “வைபவ் அடித்த சிக்ஸர்களைப் பார்த்து எனக்கு மெய்சிலிர்க்கிறது. அவரது கைகள், முன்கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் எவ்வளவு வலிமை இருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். அவருக்கு மில்லியன் முறை சல்யூட் அடிக்கிறேன். எதிர்காலத்தில் கூட இதைவிடப் பெரிய இன்னிங்ஸை யாராலும் விளையாட முடியாது என்று நினைக்கிறேன்” எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.

