ஹர்திக் போனா பஞ்சாபின் அந்த பிரச்னை தீராது.. இனிமேதான் பஞ்சாப் ரொம்ப பலவீனமா இருப்பாங்க – இந்திய முன்னாள் வீரர்

ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அர்ஷ்தீப் சிங் இடையே வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதன்படி ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கும், அர்ஷ்தீப் சிங் மும்பை அணிக்கும் மாறியுள்ளனர். இந்த அதிரடியான மாற்றம் கிரிக்கெட் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில், ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருப்பார் என்பது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய விஷயங்களைத் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு ஏற்கனவே பல ஆல்-ரவுண்டர்கள் இருப்பதால், ஹர்திக்கின் வருகை அந்த அணியின் முக்கிய பிரச்சினைக்குத் தீர்வாக இருக்காது என்பதே அவரது கருத்தாக உள்ளது.

- Advertisement -

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும்போது, “பஞ்சாப் அணியின் உண்மையான பிரச்சினை பேட்டிங் கிடையாது. அவர்களுக்கு ஆல்-ரவுண்டர்கள் பற்றாக்குறையும் இல்லை. அவர்களின் முக்கிய பலவீனமாக இருந்தது பந்துவீச்சுதான். தற்போது அர்ஷ்தீப் சிங் வெளியேறியதால் அந்தப் பகுதி மேலும் பலவீனமடைந்துள்ளது. ஹர்திக் பாண்டியா சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் பஞ்சாப் அணியின் பந்துவீச்சுப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles