சிஎஸ்கேவின் இந்த முடிவு பயத்தையும் பதட்டத்தையும்தான் காட்டுது.. இப்படியே இருந்தா அதல பாதாளம் போயிடும் – சிஎஸ்கே முன்னாள் வீரர் எச்சரிக்கை

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேற்கொண்டுள்ள வீரர்கள் பரிமாற்றம் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர்களான கலீல் அகமது மற்றும் நாதன் எல்லீஸ் ஆகியோரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வழங்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோரை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இந்த முடிவை முன்னாள் வீரர் எஸ்.பத்ரிநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில், சிஎஸ்கே அணியின் ட்ரேட் முடிவுகள் குறித்து பத்ரிநாத் சில முக்கியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சன்ரைசர்ஸ் அணியில் பிளேயிங் லெவனில் கூட வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் இருந்த லியாம் லிவிங்ஸ்டனை அதிக விலைக்கு வாங்கியிருப்பது எந்த வகையில் நியாயம் என்றும், ஜாக் எட்வர்ட்ஸ் யார் என்றே பலருக்கும் தெரியாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பத்ரிநாத் கூறும்போது, “இது சரியான ட்ரேட் கிடையாது. சிஎஸ்கே அணியின் பதற்றத்தையும் அவசரத்தையும் காட்டுகிறது. கலீல் அகமது பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடிய தரமான இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர். அவரைத் தக்கவைத்திருக்க வேண்டும். வெளிநாட்டு வீரர்களை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். ஆனால் தரமான இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்” என்று விமர்சித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles