உங்களுக்கு செருப்படி காத்திருக்கு தம்பிகளா.. காட்டமான விமர்சனத்தை பதிவு செய்த யுவராஜ் சிங்.. பஞ்சாப் வீரர்களின் விளையாட்டான செயல்.. விபரம் இதோ

ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இதன் முதல் பிளே ஆப் சுற்று போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரிலிருந்து வெளியேறி இருப்பது பல ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது தொடரின் ஆரம்பத்தில் தோல்வியே சந்திக்காமல் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி அதற்குப் பிறகு வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியாமல் கடைசியாக நடைபெற்ற ஆறு போட்டியிலும் தோல்வியடைந்து பெரிய ஏமாற்றத்தை சந்தித்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் கடைசியாக நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்புக்காக காத்திருந்தது. ஆனால் ராஜஸ்தான் அணி எட்டாவது வெற்றியைப் பெற்றதால் நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் பஞ்சாப் அணி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பஞ்சாப் வீரர்களின் மோசமான செயல்பாடே அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதிலும் மூத்த வீரராக கருதப்படும் அர்ஸ்தீப் சிங் இந்தத் தொடரில் படுமோசமான பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதில் அவர் 14 போட்டிகளில் 38.64 சராசரி ரோடு 14 விக்கெட் மட்டுமே வீழ்த்தியது அந்த அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மற்றொரு அணி வீரரான ஹர்பீத் பிரார் பிரியாண்ஸ் ஆர்யா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ஸ்லாகர், பிளாக்கர் என்ற கமெண்ட் செய்திருந்தார். இதைப் பார்த்து கடுப்பான யுவராஜ் சிங் இப்போது “நீங்கள் அனைவரும் செருப்படி வாங்கும் நேரம் வந்துவிட்டது” என கடுமையான விமர்சனத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles