நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்கு திலக் வர்மா அற்புதமாக விளையாடி அதிரடி அரை சதம் அடித்து அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது ” இந்த தோல்வி விழுங்கி கொள்ள மிகவும் கடினமானது. ஆனாலும் போட்டியில் எந்த ஒரு தருணத்தையும் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் இந்த போட்டி மிகவும் சிறப்பாக இருந்தது. திலக் வர்மா அற்புதமாக விளையாடினார். அவரைப் பாராட்ட வேண்டும்”
“இதற்கு அடுத்த நாங்கள் பகல் போட்டியில் ஆர் சி பி அணிக்கு எதிராக விளையாட இருக்கிறோம். அந்த போட்டிக்காக மிகவும் உற்சாகமாக காத்திருக்கிறோம். மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்பது நல்ல கிரிக்கெட்டை கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.

