இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாராக செயல்பட்டுள்ள நான்கு கேப்டன்களை மாற்ற அந்த அணி உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதில் முதல் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். அவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடாமல் வெளியில் வைக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்த இடத்தில் கடந்த மெகா ஏலத்தில் மிகப்பெரிய விலை கொடுக்கப்பட்டு வாங்கப்பட்ட லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இருக்கிறார். இவர் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் பெரிய சொதப்பல்களை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இரண்டு இடங்களில் கொல்கத்தா மற்றும் டெல்லி கேப்டன்கள் மற்றும் அக்சர் படேல் இருக்கிறார்கள். இந்த நான்கு கேப்டன்களும் உறுதியாக அடுத்த ஆண்டு மாற்றப்பட்டு விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

