நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக விராட் கோலி 60 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 105 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் அவர் இந்த போட்டியில் வெற்றி குறித்து பேசி இருக்கிறார்.
கடந்த இரண்டு போட்டிகளாக விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியிருந்தார். இந்த நிலையில் நேற்று இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று போட்டியை முடித்ததோடு சதமும் அடித்தார்.
இதுகுறித்து விராட் கோலி பேசும்போது “நான் இந்த சதத்தை வெற்றியை கொண்டாடுவதை செய்ய மாட்டேன். ஏனென்றால் நாங்கள் எடுத்த இந்த இரண்டு புள்ளிகள் எவ்வளவு முக்கியமானது என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் தொடர்ந்து சிறப்பாக இருக்க வேண்டும் என்கின்ற விழிப்புணர்வுக்கு இந்த வெற்றியை வைத்துக் கொள்வேன்”
” மேலும் மக்களிடமிருந்து வரும் அழுத்தம் என்பது என்னை எப்பொழுதும் பணிவாக வைத்திருக்கிறது. என்னுடைய முக்கிய நோக்கம் நான் விளையாடும் நேரத்தை அனுபவித்து விளையாட வேண்டும். ஏனென்றால் நான் சிறிது காலம்தான் விளையாட போகிறேன்- என்று கூறியிருக்கிறார்.

