நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக பஞ்சாப் அணிக்கு எதிராக அறிமுகமாகிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மாதவ் திவாரி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். மேலும் அவர் போட்டி குறித்து பேசி இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்களில் 42 கொடுத்த அவர் இரண்டு முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார். அதே சமயத்தில் பேட்டிங்கில் கடைசியில் வந்து எட்டு பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதுகுறித்து மாதவ் திவாரி பேசும்போது “இந்த போட்டிக்கு முன்பாக எங்களுடைய பேட்டிங் பயிற்சியாளர் என்னிடம் உனக்கு அதிகமான சக்தி இருக்கிறது எனவே வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டும் என்று நினைக்காதே என்று கூறினார். மேலும் அவர் என்னிடம் பந்தை பார்த்து அதற்கு தகுந்தது போல் விளையாட வேண்டும் என்று சொன்னார். நான் அதைத்தான் செய்தேன்”
“மேலும் என்னுடைய பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் உடன் நான் நீண்ட நேரம் செலவிட்டிருக்கிறேன். குறிப்பாக நல்ல லென்த்தில் வீசவும் சிக்ஸர் அடிக்கும் பயிற்சியிலும் நான் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன் அது எனக்கு உதவி செய்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

