ஸ்ரேயாஸ் சுத்த வேஸ்ட்.. இந்த மாதிரி மோசமா யாருமே பண்ண மாட்டாங்க.. கேப்டன்சி லாயக்கில்லை – முகமது கைஃப் அதிரடி

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி மோசமாக உள்ளதாக முகமது கைஃப் கூறியிருக்கிறார். நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சாகலுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கப்படாதது சர்ச்சையாக மாறி உள்ளது.

- Advertisement -

டெல்லி அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஐந்து பௌலர்களை மட்டுமே பயன்படுத்தினார். சாகல் வீச வேண்டிய நான்கு ஓவர்களையும் பகுதி நேர பவுலர் ஸ்டோய்னிஸ்க்கு கொடுத்தார். மேலும் இறுதிக்கட்டத்தில் முக்கிய பவுலர்களின் ஓவர் இல்லாமல் செய்தார்.

- Advertisement -

இது குறித்து முகமது கைஃப் பேசும்போது ” பஞ்சாப் அணி கடைசி கட்டத்தில் பந்து வீசுவதற்கு முக்கிய பவுலர்களான அர்ஸ்தீப் மற்றும் மார்க்கோ இருவரும் இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு பதிலாக அதிக கிரிக்கெட் விளையாடாத யாஸ் தாகூர் மற்றும் ஸ்டோய்னிஸ் இருந்தது சரியானது கிடையாது”

- Advertisement -

“சாகல் 200 விக்கெட் மேல் எடுத்த வெற்றிகரமான ஒரு பவுலர். அவருக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை. மேலும் எதிரணியை பவர் பிளேவில் மூன்று விக்கெட் நிறுத்திய பிறகு 210 ரன் எடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி சரியில்லாததால் போட்டியில் தோற்றார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles